ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சையால் வெண்புள்ளி பாதிப்புடையவர்கள் உடல்நிலையில் முன்னேற்றம்: டீன் ஜெயந்தி தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 27, 2022

ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சையால் வெண்புள்ளி பாதிப்புடையவர்கள் உடல்நிலையில் முன்னேற்றம்: டீன் ஜெயந்தி தகவல்

சென்னை, ஜூன் 27- வெண்புள்ளி பாதிப்புடையவர்கள் ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உரியதொடர் சிகிச்சை பெற்று குணமடைந்து வருகின்றனர் என்று மருத்துவமனை டீன் ஜெயந்தி தெரிவித்தார்.

சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் ’உலக வெண்புள்ளி விழிப்புணாவு தினம்’ கடைப் பிடிக்கப்பட்டது. அப்போது வெண்புள்ளி பாதிப்பு உள்ளவர்களை வேறுபாடு இல்லாமல் அன்பாக அரவ ணைத்துச் செல்லவும், முறையான சிகிச்சை, அன்பான அணுகுமுறையுடன் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மருத்துவமனை டீன் ஜெயந்தி தலைமையில் மருத்துவ கண்காணிப்பாளர் ஜி.ஆர்.ராஜசிறீ, தோல் நோய் மருத்துவர் ஆதிலட்சுமி, ஒருங்கிணைப்பு அலுவலர் ரமேஷ் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், பணி யாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து விழிப்புணர்வு மனிதச் சங்கிலி நடைபெற்றது. சிகிச்சையில் உள்ள வெண்புள்ளி குறைபாடு உள்ளவர்களுக்கு தேவையான மருந்து பெட்டகங்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் டீன் ஜெயந்தி பேசும்போது, “வெண்புள்ளி பாதிப்பு ஒரு தொற்று நோய் அல்ல.அது தோலில் ஏற்படும் ஒரு நிறமியின் குறைபாடே ஆகும். வெண்புள்ளி குறைபாடு உள்ளவர்களை எந்த வேறுபாடும் காட்டாமல், சமுதாயத்தில் உரிய அரவணைப்போடு நடத்த வேண்டும். இந்த மருத்துவமனையில் 70-க்கும் மேற்பட்ட வெண்புள்ளி பாதிப்புடையவர்கள் உரிய தொடர் சிகிச்சை பெற்று குணமடைந்து வருகின்றனர். இந்த பாதிப்புக்கு நவீன மருத்துவ சிகிச்சைகள் இம்மருத்துவமனையில் உள்ளன” என்றார்.

இது திரவுபதி முர்மு மற்றும் எனக்கான போட்டி அல்ல இது இரண்டு கொள்கைகளுக்கு 

இடையிலான போட்டி - யஷ்வந்த் சின்ஹா

புதுடில்லி, ஜூன் 27- குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்

இந்தியாவின் 16ஆவது, குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல்  ஜூலை 18ஆஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். இந்த தேர்தலில்,  பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக திரவுபதி முர்மு-வும், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா-வும் போட்டியிடுகின்றனர்.

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் முர்மு ஏற்கெனவே வேட்புமனுத் தாக்கல் செய்த நிலையில், அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகிறார். இந்த நிலையில், இன்று (27.6.2022) எதிர்க் கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

குடியரசுத் தலைவர் போட்டி குறித்து யஷ்வந்த் சின்ஹா, “நான் யார் திரவுபதி முர்மு யார் - என்பதற்கான போட்டி அல்ல, சித்தாந்தத்துக்கான போட்டி” எனக் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment