சவுதியில் செவிலியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 19, 2022

சவுதியில் செவிலியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை, ஜூன் 19 அரசின் அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மகேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிவிப்பு: 

சவுதி அரேபியாவில் பணிபுரிவதற்கு டிப்ளமோ அல்லது பிஎஸ்சி செவிலியர் தேர்ச்சி பெற்று இரண்டு வருட பணி அனுபவத்துடன் ஆண்/பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். இவர்களுக்கு உணவுப்படி, இருப்பிடம், விமான பயணச்சீட்டு ஆகியவை அந்நாட்டின் வேலையளிப்பவரால் வழங்கப்படும்.  இந்நிறுவனம் மூலமாக அளிக்கப்படும் வெளிநாட்டு வேலைகளுக்கான காலி பணியிடங்கள் குறித்த விவரங்கள் இந்நிறுவன வலைதளமான www.omcmanpower.comல் பார்க்கலாம். ஊதியம், பணி விவரங்கள் குறித்து 95662 39685, 044-22505886, 22502267 ஆகியவற்றில் தெரிந்து கொள்ளலாம். மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.omcmanpower.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களின் சுயவிவரம் அடங்கிய விண்ணப்ப படிவம், தகுதி சான்றிதழ், அனுபவச் சான்றிதழ், கடவுச்சீட்டு மற்றும் ஒளிப்படம் ஆகியவற்றை அனுப்பலாம் என கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment