நெகிழ்ச்சியான நிகழ்வு! நாங்க இருக்கோம்.. நல்லா படிம்மா! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 13, 2022

நெகிழ்ச்சியான நிகழ்வு! நாங்க இருக்கோம்.. நல்லா படிம்மா!

ஜூலை 30 அரியலூரில் நடைபெற இருக்கும் திராவிடர் கழக மாநில இளைஞரணி மாநாட்டை முன்னிட்டு சென்னை, அமைந்தகரை கடை வீதியில் பிரச்சாரம் செய்து, நன்கொடை கேட்ட போது நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்!

அக்கா வணக்கம்!  

சொல்லுப்பா...

அக்கா! அரியலூரில் திராவிடர் கழக இளைஞரணி மாநாடு நடக்குது... கடைகள் தோறும் பிரச்சாரம் செய்து வருகிறோம், உங்களால் முடிந்த பங்களிப்பை வழங்குங்கள் என்றோம்.

அக்கா: அதெல்லாம் ஒண்ணுமில்லைப்பா...

நாம் : அப்படியெல்லாம் இல்லக்கா... பெண்களின் கல் விக்காக , பெண்களுக்கும் சொத்துரிமை வேண்டும் என்று சொன்ன பெரியாரின் கொள்கைகளைப் பரப்புவதற்காக என்றோம்... சொல்லி வாய் மூடும் முன்பு உடன் வந்த தோழர் நீட் தேர்வு குறித்து விளக்கி, புதிய கல்விக் கொள்கையை விரட்டுவோம் என்றார். 

உடனடியாக அந்த அக்காவின் பெரிய மகள், தன் தங்கையைக் காட்டி இவ நீட் தேர்வெல்லாம் ரொம்ப கஷ்டம், அதெல்லாம் எழுத முடியாதுன்னு சொல்லுதுங்கனு சொன்னார்.  என்ன படிக்கிறம்மா என்று அந்த சிறுமியை கேட்டோம்? எட்டாவது என்றார். அரசுப் பள்ளியா? எனக் கேட்க ஆம் என்றார். என்னுடன் இருந்த இளைஞரணி தலைவர்,  நீ தைரியமா படிம்மா... நமக்காகத்தான் அரசு 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு கொடுத்திருக்கிறது. இட ஒதுக்கீடு என்பது பிச்சை அல்ல; நம் உரிமை!

நீங்கள் பள்ளிக்கு போய் படிங்க. நீட் தேர்வினை ரத்து செய்யும் வரை எங்கள் பிரச்சாரம், போராட்டம் ஓயாது.  படிப்ப மட்டும் விட்டுடாதம்மா என்றோம்!

அதைக் கேட்ட அந்தத் தாயும், குழந்தைகளும் புன்னகையுடன் துண்டறிக்கையினை பெற்றுக் கொண்டனர். நன்கொடை இல்லையென்று சொன்ன அதே பழக்கார அக்கா எங்களிடம் அவரது பங்களிப்பை வழங்கி, எப்படி யாவது அந்த நீட் தேர்வை ரத்து செய்ய வைச்சீங்கினா எம் பொண்ணையும் டாக்டர் ஆக்கிடுவேன் என்று உணர்ச் சியுடன் கூறினார்.

சரிக்கா, புள்ளையா நல்லா படிக்க வைங்கனு சொல்லிட்டு அந்தச் சிறுமியைப் பார்த்து ஏம்மா நல்லா படி. எதப்பத்தியும் நினைக்காத, ஏதாவது தேவை என்றால் இந்த ரோடு கடைசியைத் தாண்டி என் பேரை சொன்னால் வீட்டைக் காட்டுவார்கள்.

என்னிடம் சொல்லு என்று சொல்லிவிட்டு அவ்விடத்தில் இருந்து நகர்ந்து அடுத்த கடைக்காரரிடம்... அண்ணே வணக்கம் என்று களப்பணியை தொடர்ந்தோம்!

தளபதி பாண்டியன், 

சென்னை


No comments:

Post a Comment