இருவரின் அனுபவங்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 15, 2022

இருவரின் அனுபவங்கள்!

படிக்காமல் சாதித்த ஒருவரைக் காட்டினால், படித்து சாதித்த லட்சம் பேரைக் காட்ட முடியும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

உதாரணத்திற்கு இருவரின் அனுபவங்கள்:

“பத்தாம் வகுப்பு வரை படித்த பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் அத்தாவை அறிந்தவர்கள். ரேசன் கடைல மண்ணெண்ணைய் ஊத்துனாலே அத வாங்கிட்டு தான் ஸ்கூல்லுக்கு லேட்டா போவேன், எல்லோரையுல் அடிக்கிற பிவி என்னைய மட்டும் போய்த் தொலைடான்னு விட்றுவாரு எவ்வளவு சேட்டைகளை செய்தாலும் எங்க அத்தாவையும், அத்தாவுடன் டீக்கடைல நான் நிக்கிறதையும் அறிந்த வர்களாக இருந்ததால் கண்டிப்புடன் மட்டும் விட்டு விடுவார்கள். 

பத்தாம் வகுக்பு முடிந்து மேலூரை விட்டு சிவகங்கையில் ஒரு தனியார் பள்ளியில் சேர்த்த நாள் முதல் நான் முடங்கிப் போனேன். என்னால் அந்த பள்ளியுடனும் ஒன்ற முடியவில்லை, பாடத்தையும் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை. வழக்கம் போல காலாண்டு பரீட்சையில் குறைந்த மதிப்பெண் ணிற்காக அத்தாவை அழைத்து வரச் சொன்னார்கள். 

எந்தக் காலத்திலும் அத்தாவை பள்ளிக்கும், கல்லூரிக்கும் (!!) அழைத்துச் செல்வதில் எனக்கு கூச்சமோ, பயமோ இருந்ததில்லை. ஏனெனில் காலையிலும், மாலையிலும் அத்தாவுடன் டீக்கடையிலேயே இருந்ததால் வெகு இயல்பாக அவருடன் இருந்தேன். மதிப்பெண்கள் குறித்து அத்தா எப்போ துமே கவலைப்பட்டதில்லை, பள்ளியில் பிரச்சினை என்றாலும் பள்ளிக்கு வந்து எனக்காக பேசுவார். 

அதேபோல் ப்ளஸ் 1இல் காலாண்டு மதிப்பெண் குறைவுக்காக அத்தா சிவகங்கை பள்ளிக்கு மதியம் வந்தார். வழக்கம் போல வாத்தியாருங்க நம்மளப் பத்தி காறித் துப்புனத சொன்னதை கேட்டு "இனிமேல் ஒழுங்கா படிப்பான் சார், கண்டிக்கிறேன்னு" சொல் லிட்டு, பையன இப்போ என்னோட கூட்டிப் போறேன், நாளக்கி ஸ்கூல்லுக்கு அனுப்பிட்றேன்னு அவரோடயே கூட்டிட்டு வந்துட்டாரு.. சிவகங்கை கோர்ட் வாசல்ல மேலூர் பஸ்சுக்காக நிக்கும் போது, அங்க டீக்கடை போட்றுக்க பாண்டி கடைல சூடா பஜ்ஜிய பாத்தவொடன ஆளுக்கு ரெண்டு சட்னி யோட வாங்கி கொடுத்தாரு.. அப்போ, 

"அத்தா நான் இனிமேல் ஸ்கூலுக்கு போகல, டீக்கடைய வச்சே பெரியாளயிடுவேன், கவலப்படா தீங்கன்னு" சொன்னேன்

அதுக்கு "அடேய், ஒன்னுமில்லாதப்பையே உங்க அண்ணனுங்கள டிகிரி படிக்க வச்சுட்டேன், இப்போ அவனுங்க சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டானுங்க, உன்னைய டிகிரி படிக்க வைக்கிறது கஷ்டம் இல்ல.. யாரு வேணும்னாலும் பெரியாளாகலாம், காசு சம்பாதிக்கலாம், ஆனா எல்லோராலேயும் படிக்க முடியாதுடா.. நீ ஒரு டிகிரி வாங்குற வரை எத்தன வருசமானலும் படி, மார்க்க பத்தி கேக்கல, ஆனா டிகிரி வாங்கிடு ரெண்டு மகனுங்க டிகிரி வாங்கிட் டானுங்க, உன்னைய டீக்கடைல போட்டு படிப்ப கெடுத்துட்டன்னு பின்னால யாரும் என்னைய சொல் லிடக் கூடாது.. இப்ப என்ன இந்த ஸ்கூல் பிடிக்கலையா, விடு.வேற ஸ்கூல்ல சேத்து விட்றேன்னு" சொல்லி, அங்க இருந்து வெள்ளலூர் அரசு மேல்நிலைப்பள்ளில சேத்து விட்டாரு. 

அதுக்கு பொறவு காலேஜூக்கு ஒரு பத்து தடவ பஞ்சாயத்துக்கு வந்துருப்பாரு.. ஆனாலும் மூணு வருச டிகிரிய நாலாவது வருசம் தான் ஒரு மிகப்பெரிய போராட்டத்தோட முடிச்சேன்..

அந்த ஒத்த டிகிரி தான் மேலூரை தாண்டாத என்னை அமெரிக்கா வரை இழுத்து சென்றது.. பன்னாட்டு கம்பெனிகளில் ஏதோதோ சொல்லி பொழப்பை ஓட்ட வைக்கிறது..

அத்தா அன்று சொன்னதைத் தான்

இன்று முதலமைச்சரும் சொல்லி இருக்கிறார்!

படி! மீதியை நீ கற்ற கல்வி பார்த்துக் கொள்ளும்!!”

-பிலால் அலியார், துபாய்


2007 ஆம் ஆண்டு...

ஒரு காம்பவுண்ட்ல வீடு maintenance செஞ்சிட்டு இருந்தப்போ பக்கத்து வீட்ல இருந்த ஒரு Swiss காரன்கூட லைட்டா பழக்கம் ஏற்பட்டுச்சு. 

நமக்குத் தெரிஞ்ச அரைகுறை இங்லீசை வச்சு அவன்ட்ட அப்பப்போ பேசிட்டு இருந்தேன்.  அப்டியே போயிப்போயி டெய்லி ஏதாவது பேசிக்கிற அளவுக்கு பழக்கம் ஆயிருச்சு. கொஞ்ச நாள்ல அவனுக்கும் எனக்கும் ஒரு நல்ல புரிந்துணர்வும் வந்திருந்துச்சு. 

இங்கே ஏர்போர்ட்ல ஏதோ ஒரு ப்ராஜக்ட் விசயமா வந்தவன் அந்த வேலை முடியாததால நாலு மாசம் இங்கே தங்க வேண்டியதாப் போச்சுனு சொன்னான். ஒருநாள் நைட்டு பத்துமணிக்குப் போன் பண்ணி அவசரமா வரச்சொன்னான். உடனே போனேன். 

அவன் Swiss வேலை செய்ற கம்பெனிக்கு Head office building  சொந்தமா கட்டப்போறாங்கனும், அந்த ப்ராஜக்ட்ல  வேலை செய்ய உனக்கு விருப்பம் இருக்கானு கேட்டான். 

அரபு நாட்ல கிடக்கிறவனுக்கு அய்ரோப்பா போகவா கசக்கப்போவுது? நானும் உடனே ஓகேனு சொன்னேன். பாஸ்போர்ட் நகல் அது இதுனு ஏதேதோ கேட்டான். எல்லாத்தையும் குடுத்தேன். என் கண்ணுமுன்னாடியே எல்லாத்தையும் ஸ்கேன் பண்ணி மெயில் அனுப்புனான். 

அடுத்த ஒரு வாரத்துல ரிப்ளை வரும். கண்டிப்பா Swiss போயிரலாம்னு சொன்னான். ஏதோ வானத்துல பறக்கிற மாதிரி பீலிங்ல ஒரு வாரமும் போச்சு, ரெண்டு வாரமும் போச்சு. ஒரு ரிப்ளையும் இல்லை. கண்டிப்பா விசா வந்துரும். நீ ரெடியா இருந்துக்கனு டெய்லி சொல்லுவான். 

மூனாவது வாரத்துல ஒருநாள் ராத்திரி பத்து மணிக்குப் போன்பண்ணி கம்பெனில இருந்து ரிப்ளை வந்துருச்சு. உன்னோட டிகிரி சர்டிபிகேட்டயும், எக்ஸ்பீரியன்ஸ் சர்டிபிகேட்டயும் உடனே ஸ்கேன் பண்ணி அனுப்புனு சொன்னான். அவன் பேசுன விதம் என்னயவிட அதிகமான சந்தோசத்துல அவன் இருந்தான்னு புரிஞ்சது. 

ஆனா எனக்குத்தான் தலைல இடி விழுந்த மாதிரி இருந்துச்சு. என்ட்ட பத்தாங்கிளாஸ் சர்டிபிகேட்டும், மார்க் ஷீட்டும் மட்டுந்தான் இருக்குனு அவன்ட்ட சொன்னேன். அவனால நம்பவே முடியல. ரொம்பவே நொந்துட்டான். 

அன்றைக்கு Swiss போயிருப்பேனா இல்லை யாங்கிறதெல்லாம் ரெண்டாவது விசயம். டிகிரிங்கிற ஒரு A4 size பேப்பர் மட்டும் இல்லைங்கிறதால அடுத்தகட்ட முயற்சிலயும், அய்ரோப்பா ஆசைலயும் ஒரு லோடு மண்ணு கொட்னமாதிரி ஆகிப்போச்சு. 

அடேய் பசங்களா, 

அதனாலதாண்டா நான் சொல்றேன். 

நம்ம முதலமைச்சரும் சொல்ராறு. 

வாழ்க்கைல ஜெயிக்கிறியளோ, தோக்குறியளோ அதெல்லாம் ரெண்டாவது விசயம். 

முதல்ல ஒரு டிகிரி பேப்பரை வாங்கி வச்சிக்கோங்கடா.

-அருள்ராஜ், தமாம்

சமூக ஊடகங்களிலிருந்து:

தகவல்: வி.சி.வில்வம்

 

No comments:

Post a Comment