திராவிட மாடல் ஆட்சியிலேயே வாலை ஆட்டிப்பார்க்கும் பார்ப்பனியம் 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அறிவித்து பின்னர் திரும்பப்பெற்ற மதுரை காமராசர் பல்கலைக்கழகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 15, 2022

திராவிட மாடல் ஆட்சியிலேயே வாலை ஆட்டிப்பார்க்கும் பார்ப்பனியம் 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அறிவித்து பின்னர் திரும்பப்பெற்ற மதுரை காமராசர் பல்கலைக்கழகம்

மதுரை, ஜூன். 15- மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முது அறிவியல் உயிரிதொழில்நுட்பவியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கை கடந்த வாரம் வெளியிடப்பட்டது. அதில் மாணவர் சேர்க்கையில் ஒன்றிய அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கை கடைப் பிடிக்கப்படும் என்றும், 10% இடங் கள் உயர்வகுப்பு ஏழைகளுக்கு வழங் கப்படும் என்றும் இணையத்தில் மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மதுரை காமராசர் பல்கலைக் கழகம் தமிழ்நாடு அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகி றது. பல்கலைக்கழகங்களுக்கு தமிழ் நாடு அரசு தான் நிதியுதவி வழங்கி வருகிறது. அந்த அடிப்படையில், காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழ் நாடு அரசின் 69% இட ஒதுக்கீடு தான் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஆனால், காமராசர் பல்கலைக்கழகம் ஒரு குறிப்பிட்ட படிப்புக்கு மட்டும் ஒன்றிய அரசின் இட ஒதுக்கீட்டை கடைப்பிடிப்ப தாக அறிவித்தது

மதுரை காமராசர் பல்கலைக்கழ கத்தில் இரு வகையான முது அறிவியல் உயிரிதொழில்நுட்பவியல் படிப்புகள் நடத்தப்படுவதாகவும், மாநில அரசின் நிதியுதவியுடன் நடத்தப்படும் 20 இடங்கள் கொண்ட படிப்புக்கு மாநில அரசின் இட ஒதுக்கீடும், ஒன்றிய அரசின் நிதியுத வியுடன் நடத்தப்படும் 30 இடங்கள் கொண்ட படிப்புக்கு ஒன்றிய அர சின் இட ஒதுக்கீடும் கடைப்பிடிக் கப்படுவதாகவும் பல்கலைக்கழகத் தின் தரப்பில் கூறப்பட்டது. 

ஒன்றிய அரசின் அறிவியல் மற் றும் தொழில்நுட்பத்துறையின் நிதி உதவியில் ஒரு படிப்பு நடத்தப்படு கிறது என்பதாலேயே, அந்த படிப் புக்கு ஒன்றிய அரசின் இட ஒதுக் கீட்டுக் கொள்கையை நடைமுறைப் படுத்த முடியாது. இந்தியாவில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங் களுக்கும் பல்கலைக்கழக மானியக் குழு ஏதோ ஒரு வகையில் நிதியுதவி வழங்குகிறது; அதற்காக அந்தப் பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் ஒன்றிய அரசின் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த முடியாது.

தமிழ்நாட்டில்  11 மருத்துவக் கல்லூரிகள் ஒன்றிய அரசின் 60% நிதியுதவியுடன் அமைக்கப்பட்டன. அதற்காக அந்த மருத்துவக் கல்லூரி களில் ஒன்றிய அரசின் இட ஒதுக் கீட்டுக் கொள்கை நடைமுறைப் படுத்தப்படவில்லை. மாநில அர சின் இட ஒதுக்கீடு தான் நடை முறைப்படுத்தப்படுகிறது என்பதை பல்கலை. உணர வேண்டும். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒன்றிய அரசின் நிதியுதவியுடன் நடத்தப்பட்டு வந்த இரு எம்.டெக் படிப்புகளுக்கு உயர்ஜாதி ஏழை களுக்கான 10% இட ஒதுக்கீடு நடை முறைபடுத்தப்பட்டது.

ஆனால், இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ”ஒன்றிய அரசு ஏதோ இரு படிப்புகளுக்கு மட்டும் தான் நிதியுதவி வழங்குகிறது. அதைத் தவிர பல்கலைக்கழகத்தின் ஒட்டுமொத்த உட்கட்டமைப்பும் மாநில அரசின் நிதியைக் கொண்டு உருவாக்கப்பட்டது. இத்தகைய சூழலில் மாநில அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிராக பல்கலைக்கழகங்கள் செயல்படக் கூடாது” என்று கண்டனம் தெரிவித்தது. அதைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகம் ஒன்றிய அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள் கையை கைவிட்டு, மாநில அரசின் 69% இட ஒதுக்கீட்டுக் கொள்கையை கடைப்பிடித்து வருகிறது. 

ஆனால் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ஒன்றிய அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை தொடர்ந்து கடைப்பிடிப்போம் என்று கூறிவந்தது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டின் அனைத்து கல்வி நிலையங்களிலும் தமிழ்நாடு அரசின் இடஒதுக்கிடு தொடரும் என்று தற்போது அறிவித்தது, இதனை அடுத்து மதுரை காமராசர் பல்கலைக்கழகமும் பார்ப் பனர்களுக்கு என்று அறிவிக்கப் பட்ட உயர்ஜாதி ஏழைகளுக் கான 10 விழுக்காடு இட ஒதுக்கிட்டை ரத்து செய்தது. 

No comments:

Post a Comment