செஞ்சியில் பகுத்தறிவாளர் கழக பொன்விழா நிறைவு மாநில மாநாடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 18, 2022

செஞ்சியில் பகுத்தறிவாளர் கழக பொன்விழா நிறைவு மாநில மாநாடு

தமிழர் தலைவர் கி.வீரமணி, அமைச்சர் பெருமக்கள் க.பொன்முடி, எ.வ.வேலு, கே.எஸ்.மஸ்தான், மற்றும் இரா.முத்தரசன், தொல்.திருமாவளவன், சுப.வீரபாண்டியன் பங்கேற்கின்றனர்

சென்னை, ஜூன் 18 பகுத்தறிவாளர் கழக பொன்விழா நிறைவு மாநில மாநாடு 19.6.2022 அன்று செஞ்சியில் நடைபெறுகிறது.

பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலை வர் இரா.தமிழ்ச்செல்வன் தலைமையில் காலை 9 மணிக்கு செஞ்சி வள்ளி அண் ணாமலை திருமண அரங்கம் கெடார் நடராசன் நினைவரங்கத்தில் தொடங் கும் நிகழ்வில் மாநில கலைத்துறை செயலாளர் மாரி. கருணாநிதி அவர் களின் முன்னிலையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

பகுத்தறிவாளர் கழக பொதுச் செய லாளர் ஆ.வெங்கடேசன் வரவேற்புரை யாற்றுகிறார். தமிழ்நாடு அரசின் உயர் கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு. முனைவர் க.பொன்முடி அவர்கள் மாநாட்டை திறந்து வைத்து உரை யாற்றுகிறார்.

பகுத்தறிவு - அறிவியல் கருத்தரங்கம்

திராவிடர் கழக செயலவைத் தலை வர் சு.அறிவுக்கரசு அவர்கள் தலைமை யில் இம்மாநாட்டில் பகுத்தறிவு - அறிவியல் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதற்கு பகுத்தறிவாளர் கழக பொரு ளாளர் முனைவர் சி.தமிழ்ச்செல்வன் வரவேற்புரையாற்ற, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மேனாள் துணை வேந்தர் பேராசிரியர் முனைவர் ஆர்.டி.சபாபதி மோகன் தொடக்கவு ரையாற்றுகிறார்.

உரை வீச்சு

"சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு" என்ற தலைப்பில் முனைவர் துரை.சந்திர சேகரன், "கடவுளை மற - மனிதனை நினை" என்ற தலைப்பில் முனைவர் ப.காளிமுத்து, "வெல்க திராவிடம்!" என்ற தலைப்பில் ஆ.வந்தியத்தேவன், "சமூகநீதி காப்போம்" என்ற தலைப்பில் கோ.கருணாநிதி, "பெண்ணுரிமை காப் போம்" என்ற தலைப்பில் சே.மெ.மதிவ தனி, "அரசமைப்புச் சட்டம் கூறும் விஞ்ஞான மனப்பான்மை" என்ற தலைப்பில் முனைவர் வா.நேரு, அறிவியலும் மூடநம்பிக்கையும் காட்சிகள் மூலம் விளக்கி டாக்டர் கணேஷ் வேலுசாமி ஆகியோர் உரையாற்றுகிறார்கள்.

தீர்மான அரங்கம்

பகுத்தறிவாளர் கழக மேனாள் மாநி லத் தலைவர் வீ.குமரேசன் அவர்கள் தலைமையில் தீர்மான அரங்கம் நடை பெறுகிறது.

திராவிடர் கழகப் பொதுச் செயலா ளர் வீ.அன்புராஜ் தொடக்கவுரையாற்ற மாநில பொறுப்பாளர்கள் தீர்மானங் களை வாசிப்பார்கள்.

பகுத்தறிவாளர் கழக புரவலர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றுகிறார். இணைப்புரையை பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் வி.மோகன் வழங்க, பகுத்தறிவு ஆசிரியர் அணி மாநிலத் தலைவர் வா.தமிழ்பிரபாகரன் நன்றி கூறுகிறார்.

கலை நிகழ்ச்சி

புதுவை குமார் அவர்களின் "மந்தி ரமா? தந்திரமா" கலை நிகழ்ச்சி நடை பெற இருக்கிறது.

மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி

பிற்பகல் 4 மணியளவில் வள்ளி அண்ணாமலை திருமண அரங்கத்தில் இருந்து மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி நடைபெறுகிறது.

விழுப்புரம் மண்டல திராவிடர் கழக செயலாளர் க.மு.தா.இளம்பரிதி தலைமையில் நடைபெறும் இப்பேர ணியை விழுப்புரம் மண்டல கழகத் தலைவர் வழக்குரைஞர் ஜி.எஸ்.பாஸ்கர் தொடங்கி வைக்கிறார்.

திறந்தவெளி மாநாடு

மாலை 5.30 மணியளவில் செஞ்சி இந்தியன் வங்கி அருகில் பகுத்தறிவாளர் கழக திறந்தவெளி மாநாடு - திண்டிவனம் க.மு.தாஸ் நினைவரங்கத்தில் நடை பெறுகிறது.

புதுகை பூபாளம் குழுவினரின் கலை நிகழ்ச்சியுடன் தொடங்கும் இம்மா நாட்டின் வரவேற்புரையை விழுப்புரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலை வர் துரை.திருநாவுக்கரசு ஆற்றுகிறார்.

மாநிலப் பகுத்தறிவாளர் கழகப் புரவலர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை வகித்து உரையாற்றுகிறார். தமிழ்நாடு அரசின் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு. கே.எஸ்.மஸ் தான் வாழ்த்துரை வழங்குகிறார். விழுப் புரம் மாவட்ட திராவிடர் கழக அமைப் பாளர் சே.கோபண்ணா, விழுப்புரம் மாவட்டக் கழக தலைவர் ப.சுப்பராயன் முன்னிலை வகிக்கின்றனர்.

படத்திறப்புகள் - தலைவர்கள் உரை

இத்திறந்தவெளி மாநாட்டில் தமிழ் நாடு அரசின் பொதுப்பணித்துறை அமைச்சர் மாண்புமிகு எ.வ.வேலு அவர்கள் தந்தை பெரியார் படத்தையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் இரா.முத்தரசன் அவர்கள் அண்ணல் அம்பேத்கர் படத்தையும்,  விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் அறிஞர் அண்ணா படத்தையும், திராவி டர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் முத்தமிழறி ஞர் கலைஞர் படத்தையும், திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண் டியன் அவர்கள் அன்னை நாகம்மையார் - மணியம்மையார் படத்தையும்,

திராவிடர் கழக பிரச்சாரச் செயலா ளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்கள் சாவித்திரி புலே படத்தையும் திறந்து வைத்து உரையாற்றுகிறார்கள்.

இம்மாநாட்டின் இணைப்புரையை திராவிட மாணவர் கழக மாநிலச் செய லாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் வழங்க, விழுப்புரம் மாவட்ட பகுத்தறி வாளர் கழக  செயலாளர் வே.இரகு நாதன் நன்றி கூறுகிறார்.

No comments:

Post a Comment