மும்பை, ஜூன் 18 இந்தியாவில் இருந்து இந்த ஆண்டு சுமார் 8000 க்கும் மேற்பட்ட பெரும் பணக் காரர்கள் வெளியேறி வெளிநாட்டில் குடியேறுவார்கள் என்று ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
ஹென்லி குளோபல் சிட்டிசன் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்த தகவல் வெளியாகி இருக்கிறது. அமெரிக்க டாலர்களில் மில்லியனில் தொடங்கி பில்லியன்களில் சம்பாதிக் கும் இந்தியர்களின் எண்ணிக்கை அடுத்த பத்தாண்டுகளில் 80 சதவீதம் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது அந்த நிறுவனம்
பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் இந்த வளர்ச்சி 10 சதவீதமாகவும் அமெரிக்காவில் 20 சதவீதமாகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
நாடு கடந்து உலகளாவிய வணிகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை அணுகுவதில் தொழில்நுட்பம் சார்ந்த இளம் தொழில்முனைவோர் வெளிப்படுத்தும் ஆர்வம் முன்னெப் போதும் இல்லாத அளவுக்கு உள்ளது.
இந்தியாவில் இருந்து வெளி நாட்டுக்குச் செல்வோரின் எண் ணிக்கை மற்றும் இந்தியா திரும்பு வோரின் எண்ணிக்கையுடன் ஒப்பிடு கையில் இந்த ஆண்டு வெளிநாட்டுக்கு குடிபெயர்வோரின் எண்ணிக்கை 8000 மாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் புதுப் பணக்காரர்கள் அதிகரித்து வருவதால் இவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவதால் எந்தப் பாதிப்பும் இருக்காது என்றும் இந்தி யாவின் பொருளாதாரம் மற்றும் வாழ்க்கைத் தரம் முன்னேறியவுடன் வெளிநாட்டில் சம்பாதித்து பின் இந்தியா திரும்புவோரின் எண்ணிக் கையும் உயரவாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.
உலகளவில் இந்த ஆண்டு அய்க்கிய அரபு நாடுகளில் 4000 பெரும் பணக்காரர்கள் குடியேறு வார்கள் என்றும் அதற்கு அடுத்த படியாக ஆஸ்திரேலியாவில் 3500 பேரும் சிங்கப்பூரில் 2800 பேரும் குடியேறுவார்கள் என்று தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து வெளி யேறும் இந்தியர்கள் சிங்கப்பூரில் குடியேறவே அதிகம் விரும்புவதாகவும் அதற்கு அடுத்தபடியாக துபாயில் குடியேற விரும்புவதாகவும் தெரிவித்துள்ள அந்த அறிக்கை. அய் ரோப்பிய நாடுகளில் குறிப்பாக போர்ச்சுகல், மால்டா, கிரீஸ் ஆகிய நாடுகளில் குடியேறுவதை விரும்புவ தாகவும் குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment