சென்னை, ஜூன் 29- பன்னாட்டு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தினத்தை முன்னிட்டு,வாத்வானி அறக்கட்டளை கரோனா காலத்தில் வழங்கியது போலவே, சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் புதிய சந்தைக்கு ஏற்றவாறு மாற்றியமைத்துக் கொள்வ தற்கும், புதிய போட்டிகளை எதிர்கொள்வதற்கும் கட்ட மைப்பு ஆதரவை நீட்டித்து வழங்குவதாக அறிவித்துள்ளது.
செலவுகளை குறைப்பதற்காக சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை தேர்வு செய்ய வேண்டியது அவசியமாகும்.
இத்துறையில் உள்ள பணியாளர்களை மேம்படுத்துதல், மறுதிறன் செய்தல், அவர்களுக்கு பரந்த அளவிலான விநியோகஸ்தர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அணுகல், சிறந்த கட்டண முறைகள் மற்றும் பரந்த சந்தைத் தெரிவுநிலை போன்றவை டிஜிட்டல் மயமாக்கல் மூலம் எளிதாகிறது. 6கோடியே 30லட்சம் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இந்தியாவில் 11 கோடி வேலைகளை உருவாக்குகின்றன. இதனால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை இந்த நிறுவனங்கள் வழங்குவதாக வாத்வானி அறக்கட்டளையின் இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் தலைமை இயக்க அதிகாரி சஞ்சய் ஷா கூறியுள்ளார்.
No comments:
Post a Comment