சென்னை, ஜூன் 7 பூவிருந்தவல்லி தாலுகாவுக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களைச் சேர்ந்த பொது மக்களுக்கு தேவையான பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ், ஜாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், பட்டா மற்றும் ஓய்வூதியம் பெற சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு விதமான சான்றிதழ்களை பெறுவதற்காக 6 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
பூவிருந்தவல்லி தாலுகா அலுவலகத்தில் ஜூன் 7, 8, 9, 10, 14, 15 ஆகிய தேதிகளில் காலை 10 மணி அளவில் இந்த சிறப்பு முகாம் தொடங்கி நடைபெறும். எனவே, பூவிருந்தவல்லி தாலுகாவை சேர்ந்த பொதுமக்கள் இந்த வாய்ப் பினை பயன்படுத்தி சிறப்பு முகாமில் தேவையான சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் வருவாய் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment