"புல்டோசர் அநீதி" நீதியரசர் மதன் பி. லோகூர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 27, 2022

"புல்டோசர் அநீதி" நீதியரசர் மதன் பி. லோகூர்

நடவடிக்கைக்கு நடவடிக்கை (Measure for Measure) என்னும் நாடகத்தில் ஏஞ்சலோ (Angelo) மூலம் பேசும் ஷேக்ஸ்பியர் கேட்டிருந்த மிகவும் பொருத்தமான ஒரு கேள்வி இன்னமும் எதிரொலித் துக் கொண்டிருக்கிறது. தூண்டி விட்டவர் - தூண்டி விடப்பட்டவர் ஆகிய இருவரில் யார் மிகமிக அதிகமான பாவத்தைச் செய்தவர்கள்  என்பதுதான் அந்தக் கேள்வி. வன்முறையைத் தூண்டிவிடுபவர் தான் குற்றவாளி என்ற தேசத் துரோக சட்டத்தை இந்திய உச்சநீதிமன்றம் தெளிவானதாக ஆக்கி விட்டது. ஆனால் சட்டத்திற்கான இன்றைய விளக்கத்தில் தூண்டுதல் நடைபெற்றதா இல்லையா என்பது ஒரு பொருட்டே அல்ல. யாரோ ஒருவர் பேசியது அல்லது எழுதியது ஆட்சியில் இருப்ப வர்களுக்கு பிடிக்கவில்லையென்றால் அவர்கள்மீது தேசத் துரோக குற்றச்சாட்டு  நிச்சயமாக சுமத்தப்படும்.

புல்டோசர் நீதி 

ஆனால் நபிகள் நாயகத்தைப் பற்றி மிக இழிவாகப் பேசியதன் மூலம் அடையாளமற்ற ஆனால் செல்வாக்கு மிகுந்த பா.ஜ. கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்முறையைத் தூண்டி விட்ட போது இந்த சட்டங்கள் சிக்கல் மிகுந்ததாக ஆகிவிட்டது. இதனால் வன்முறையைத் தூண்டி விட்டவரை விட்டுவிட்டு தூண்டி விடப்பட்டவரை இந்த புதிய நியாயம் குற்றவாளியாக ஆக்கியுள்ளது. அதன் பின் ஒரு பொதுவான ஒரு நீதிபதி ஜுரியினால் இரட்டை தண்டனை அளிக்கப்பட்டு நிறைவேற்றப்படுகிறது. கைது செய்து சிறையில் அடைக்கப்படுவதுடன் யதேச்சதிகார மான முறையில் அவர்களது வீடுகள் "புல்டோசர் நீதி என்ற பெயரில் இப் போது பொதுவாக அழைக்கப்படுவதன் மூலம்" இடித்துத் தள்ளப்படுகின்றன.

சட்டத்தை மீறி செயல்படுபவர்கள் மீது காவல் துறை நடவடிக்கை மேற்கொள்வதற்கு இந்திய குற்றவியல் தண்டனை சட்டத்தில் போதுமான விதிகள் உள்ளன. ஆனால் வன் முறையைத் தூண்டி விட்ட செல்வாக்கு மிகுந்தவர்களுக்கோ அல்லது ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களுடன் தொடர்பு கொண்டவர்களுக்கோ இந்த சட்டங்கள் பொருந்த மாட்டாது என்று கருதப்படுவதாகவே தோன்றுகிறது. எனவே கோலி மாரோ என்னும் இனப் படுகொலைக்கான அழைப்பு தேவை அற்றதாகவே கருதி அலட்சியப் படுத்தப்படுகிறது. அர்த்தமற்ற முறையில் முஸ்லிம் மத மக்களை வெட்டிக் கொன்று விட்டு வருபவர்களுக்கு மாலை மரியாதைகள் செய்யப் படுவதே இதன் காரணம். அப்படியானால் இறை தூதர் முகமது நபி பற்றி இழிவாகப் பேசியதற்கு முட்டி மீது லேசாக ஒரு தட்டு தட்டுவதே போதுமான தண்டனை என்று நினைப்பதில் வியப்பேதும் இருக்கமுடியுமா? அதுவே போதுமான தண்டனை என்று கருதப் பட்டால் நாடு முழுவதிலும் ஆயிரக் கணக்கான மக்கள் தங்கள் அடிப்படை உரிமை களுக்காக போராடுவதைப் புரிந்து கொள்வதற்கு இயலும். அதை விடக் குறைந்த அளவிலான குற்றச் சாட்டுக்களுக்காக கூட தேசத் துரோக குற்றச்சாட்டு வழக்குகள் சாட்டப்பட்டுள்ளன. நற்பேறு அற்றவர்கள் தேசிய பாதுகாப்பு சட்டம் அல்லது பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு துன்புறும் நேரத்தில் - குறைந்த நற்பேறு பெற்றவர்கள் சட்டத்திற்கு புறம்பான செயல்கள் தடுப்பு சட்டம் போன்ற தீவிரவாத எதிர்ப்பு சட்டங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்

அரசு செயல்படும் போது

 ஒரு போராட்டத்தின்போது வன்முறையில் ஈடு படுவதற்கு அரசமைப்பு சட்ட உரிமை உள்ளதா? நிச்சயமாக இல்லை ஆயதங்கள் ஏந்தாமல் அமைதியாக மக்கள் கூடுவதற்கு மட்டும் இந்திய அரசமைப்பு சட்டம் அனுமதிக்கிறது. ஆனால் கற்களும் செங்கற்களும் ஆயுதங்களாகப் பயன் படுத்தப்படுவதற்கு இயலும். காரணம் என்னவாக இருந்தாலும் சரி எந்த சூழ்நிலையிலும் போராட் டத்தில் வன்முறை இடம் பெறுவது என்பது மட்டும் நியாயப் படுத்தவே முடியாது. வன்முயையைத் தூண்டுபவரின் முட்டி மீது லேசாக ஒரு தட்டு தட்டுவதே போதுமான - தண்டனை அளிப்பதில் தூண்டப்படுபவரின் பங்கு எதுவும் தேவைப்படாது..

ஆனாலும் வன்முறை வன்முறையைத்தான் விளைவிக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள். எனவே வன்முறைப் போராளிகளை அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு கற்றறிந்த உச்ச நீதிமன்ற நீதிபதி அளித்த அறிவுரை புகழ் பெற்றதாக ஆகி விட்டது. அப்போது வன்முறைப் போராட்டங்களில் ஈடுபட்டதாகக் கருதப் படுபவர்களின் வீடுகளை இடித்துத் தள்ளுவதற்கு தனது நிர்வாக இயந்திரத்தை அரசு பயன்படுத்தியது. தகுந்த பாடம் கற்றுக் கொடுக்க வேண்டிய அத்தகைய போராட்டக் காரர்களின் பட்டியலை தயாரிப்பதற்கு தனது நீண்ட கரங்களை அரசு பயன்படுத்தியது. 1984 ஆம் ஆண்டில் இந்திரா காந்தி படுகொலை செய்யப் பட்டபோது இது போன்றதொரு உத்தி பயன்படுத் தப்பட்டது நினைவிருக்கலாம். அப்போது அதனை நாம் இனப்படுகொலை என்று அழைத்தோம் ஆனால் இன்று அதனை ஒரு பாடம் கற்றுக் கொடுப் பது என்று நாம் அழைக்கிறோம்.

அடிப்படை உரிமைகள் 

சில வன்முறைப் போராளிகளுக்கு சொந்தமாக ஒரு வீடோ அல்லது கடையோ இருந்தது என்றாலும், பலருக்கு இருக்கவில்லை. உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக் ராஜில் வாழ்ந்து வந்த தொண்டர் ஜாவீத் முகமதின் மனைவிக்கு ஒரு சொந்த வீடு இருந்தது இழப்புக் கேடாக முடிந்தது. எனவே பாடம் கற்பிப்பது என்ற அத்தியாயத்தின் கீழ் ஜாவீத் கைது செய்யப்பட்டதும் அதன் பின் அவரது மனைவியின் வீடு இடிக்கப்பட்டது ஓர் அரசமைப்பு சட்ட மீறலாகும். குடியிருக்கும் வாழுமிடம் ஓர் அடிப்படை உரிமை என்று இரண்டு உத்தரப்பிரதேச வழக்குகளில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. வாழுமிடத் திற்கான உரிமை அரசமைப்பு சட்டத்தின் 19(1)(e) பகுதியில் அளிக்கப்பட்டுள்ள உரிமையாகும். இது அரசமைப்பு சட்ட 21 ஆவது பிரிவின் கீழ் அளிக்கப் பட்டுள்ள உயிர் வாழும் உரிமையில் இருந்து பிறந்தது என்றும் - வாழுமிடத்திற்கான உரிமைக்கு இன்றிய மையாததாக இருக்கும் அந்த உரிமை அரசமைப்பு சட்ட 21 ஆவது பிரிவில் அளிக்கப்பட்டுள்ள தீர்ப்புகளில் நிலை நாட்டப்பட்டுள்ளது. எவருக்கும் ஒரு வீடு இல்லாமல் இருக்கும் அவர்களது உறவி னர்கள் ஷரன்பூர் காவல் நிலையத்தில் லத்திகளைக் கொண்டு மிருகத்தனமாக தாக்கப்பட்டனர். அதன் காட்சிப் பதிவு நாடெங்கும் சுற்றுக்கு வந்தது.

இத்தகைய அரசியலமைப்பு சட்ட மீறல்களை அரசினால் எவ்வாறு நியாயப் படுத்த இயலும்? ஜாவீத்தின் வீடு சட்டத்திற்குப் புறம்பாகக் கட்டப் பட்டது என்றும் வீட்டை இடிப்பதற்கான தாக்கீது அவருக்கு அளிக்கப்பட்டது அல்லது அவரது வீட்டுச் சுவரில் ஒட்டப்பட்டது என்றும் சட்டப்படி தனது தரப்பு நியாயத்தை எடுத்துக் கூறுவதற்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை அவர் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றும் அரசு தரப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறுபட்ட காரணங் களால் அரசின் இந்தக் கதை எளிதாக நம்பக்கூடியதாக இல்லை.

சட்டத்திற்குப் புறம்பான செயல்பாடு முதலாவ தாக சட்டத்திற்குப் புறம்பாகக் கட்டப்பட்டது என்று கூறப்படும் ஜாவீத்தின் வீட்டுக்கான வரியை அரசு வசூலித்திருக்கிறது. அப்போது அந்த வீடு சட்டத் திற்கு புறம்பாகக் கட்டப் பட்டதற்கு பின்னேற்பு அளிக்கப்பட்டதா? அவ்வாறு அளிக்கப்படவில்லை என்றால் சட்டத்திற்கு புறம்பான செயலுக்கு அரசும் உடந்தையாக இருந்து அதனால் லாபம் ஈட்ட வில்லையா? அதற்கு உடந்தையாக இருந்த அதி காரிகள்மீது அரசு எந்த ஒரு நடவடிக்கையையாவது மேற்கொண்டதா? இரண்டாவதாக அரசின் செயல் பாடு நியாயமானதாகவும் நேர்மையாவும் தகுந்த காரணங்களைக் கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்ற நன்கு நிலை நாட்டப்பட்ட கொள்கையின்படி மிகுந்த அவசரம் ஏதும் இல்லாத நிலையில் தனது நியாயத்தைக் கூறுவதற்கு ஜாவீத்துக்கு மற்றொரு வாய்ப்பு அளிக்கப் பட்டிருக்க வேண்டும். அவர் உடல் நலமில்லாமல் இருந்திருக்கலாம் அல்லது வெளியூர் எங்காவது சென்று இருந்திருக்கலாம். சாதாரணமாக அனைவருக்கும் வழங்கக் கூடிய  மற்றொரு வாய்ப்பு அவருக்கு ஏன் மறுக்கப்பட்டது?

மூன்றாவதாக ஜாவீத்தின் வீடு அரசு விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையன்று இடிக்கப்பட்டது. தேசிய பாதுகாப்பு சட்ட வழக்குகளிலும் தடுப்புக் காவல் சட்டத்திற்கு எதிரான வழக்குகளிலும் கூட உச்ச நீதி மன்றம் ஞாயிற்றுக் கிழமைகளில் வேலை செய்வதில்லை. அரசு விடுமுறை நாட்களிலும் வேலை செய்வது நல்லதுதான். ஆனால் அரசு விடுமுறையின் பயனை இந்தத் திறமை மிகுந்த அரசு ஜாவீத்துக்கு அளித்து இருக்கலாம் அல்லவா? நாம் நடைமுறை சாத்தியமான முறையில் செயல்படலாம் அல்லவா?

நான்காவதாக வீடு இடிக்கப்படுவது பற்றிய தாக்கீது அவரது வீட்டுச் சுவரில் சனிக்கிழமை ஒட்டப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காலையில் வீடு இடிப்பு வேலை மேற்கொள்ளப்பட்டது. வீடு இடிப்பு ஆணையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கோ மேல் முறையீடோ செய்வதற்கு ஜாவீத்துக்கோ அவரது மனைவிக்கோ எந்தவித கால அவகாசமும் அளிக்கப் படவில்லை. இதுதான் நியாயமா நேர்மையான காரணகாரிய முள்ளதா?

அய்ந்தாவதாக டில்லியில் வாழ்ந்து வந்த இருவரை கடத்திச் சென்ற உத்தரப்பிரதேச காவல் துறையினர் எந்த வித குற்றச் சாட்டும் பிறப்பிக்கப் படாமலேயே ஏறக்குறைய இரண்டு மாத காலத்துக்கு நீதிமன்றக் காவலில் வைத் திருந்தது பற்றிய ஒரு வழக்கில் டில்லி உயர்நீதி மன்றம் அரசின் காவல் துறைக்கு எதிராக தீர்ப்பு அளித்துள்ளது. நீதிமன் றத்தில் தவறான அறிக்கைகளை காவல் துறை அதிகாரிகள் பதிவு செய் தார்கள் என்றும் இந்த பிரச்சினைகள் பற்றி விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவை உயர்நீதி மன்றம் நியமிப்பதற்கு முன்னதாகவே போலி ஆவணங்களை உருவாக்கினார்கள் என்றும் உ.பி. மாநில கூடுதல் அட்வகேட் ஜெனரல் நீதி மன்றத்தில் ஒப்புக் கொண்டார். ஜாவீத் வழக்கிலும் இது போன்று உண்மைகள் மறைக்கப்பட்டு போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு இருக்கக் கூடும். இந்த இடிப்பு வேலை யுகத்தில் - பழி தீர்க்கும் நோக்கத்தில் - சட்டம் மற்றும் உண்மைகள் மறைக்கப்பட்டு ஜாவீத்துக்கான நீதி மறுக்கப்பட்டு உள்ளது. 

தங்களது செயல்பாடுகளுக்கு பொறுப்பு ஏற்று பதில் கூற வேண்டியது கடமை - இதற்கு என்னதான் தீர்வு ? 

முதலாவதாக தனது வீட்டை மறுபடியும் கட்டிக் கொள்வதற்கு ஜாவீத்துக்கு போதுமான இழப்பீட்டுத் தொகையை அரசு வழங்க வேண்டும். இரண்டாவதாக அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு அதே போன்றதொரு தொகை இழப்பீடாக வழங்கப் படவேண்டும். மூன்றாவதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பொறுப்பாக்கி அவர்களுக்கு ஒரு பாடத்தைக் கற்றுத் தரும் அளவில் தண்டிக்கப்படவும் வேண்டும். தங்களது செயல்பாடு களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பொறுப் பாக்கும் நீதிபரிபாலன நடைமுறை இந்தியாவில் வேர் கொள்ள வேண்டும். நான்காவதாக உ.பி. மாநில மனித உரிமை ஆணையம் கலைக்கப்பட வேண்டும். இதன் காரணமே எந்த கெட்டதையும் அது பார்க் காதது கேட்காததுடன் எந்த நல்லதையும் அது செய்யவில்லை.

முடிவு: தூண்டிவிட்டவர் தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டார். அதனால் தூண்டி விடப் பட்டவர் சட்டத்தின் ஆட்சிக்கு ஒரு நீண்ட விடை கொடுத்து விட்டு தங்களைப்பற்றி தாங்களே வருத்தப் பட்டுக் கொள்வதை மட்டுமே செய்ய இயலும்.

நன்றி : 'தி இந்து' 17-06-2022 

தமிழில்: த.க. பாலகிருட்டிணன்


No comments:

Post a Comment