செஞ்சி மாநாடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 27, 2022

செஞ்சி மாநாடு

 'விடுதலை' ஜுன் 23 நாளிதழில் "விஞ்ஞான கருவிகளில் அஞ்ஞானமா" தலையங்கம் வாசித்தேன். செஞ்சியில் நடைபெற்ற பகுத்தறிவாளர் கழக மாநாட்டில், ஆசிரியர் அவர்கள் அறிமுகம் செய்து வைத்த கொடியின் அமைப்பு அருமை. கேள்விகள் கேட்பதே உரிமை,  விரைந்து, நிமிர்ந்து செயல்பட வேண்டும் என உணர்த்துகிறது. 

விஞ்ஞான வளர்ச்சி வெற்றிகளை தன்னகத்தே கொண்டுஎழுச்சிபெறும் இக்காலத்தில் , மக்களிடையே அறிவுப் புரட்சியை மழுங்கடிக்கும் விதத்தில், ஊடகங்கள், ஏடுகள் ஜோதிடம், ராசிபலன், மாதபலன் என போட்டி போட்டு மக்களை மடமையில் ஆழ்த்துகின்றன.  

 அஞ்ஞானப் பாதை குழிக்குள் விழும் மக்களை காக்க, களம் காண்பதையே நலமாக எண்ணும் 'பகுத் தறிவாளர் கழகம்' வீறுநடை போடும் வேளையில், 

 ஜோதிடம், ராசி பலன்கள் என அவர்கள் வெளியிடுவதற்கு மாற்றாக 'பகுத்தறிவு' சிந்தனைகளை அதிகளவில் செயல்படுத்த வேண்டும். 

திராவிடர் கழகம்  சமூக நீதிக்காக தொடர்ந்து பணியாற்றுவது போல, பகுத்தறிவாளர் கழகம் அதன் பணியைதனித்தன்மையோடு செயலாற்றினால், 'பகுத்தறிவாளர் கழகம்' மேன்மை பெறும், வளர்ச்சி அடையும்.பகுத்தறிவு பகலவன் அய்யா அவர்களின் தொண்டுக்கு நாம் மேலும் புகழ் சேர்க்க அத்தொண்டு பயன்படும். 

- மு.சு. அன்புமணி, மதுரை 


No comments:

Post a Comment