தமிழ்நாடு அரசின் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் நியமனங்கள் சட்டப்படி செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 28, 2022

தமிழ்நாடு அரசின் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் நியமனங்கள் சட்டப்படி செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது!

வெற்றிக்கனி பறித்த முதலமைச்சர் - இந்து சமய அறநிலையத் 
துறை அமைச்சர் - அதிகாரிகளுக்கு நமது பாராட்டும் - நன்றியும்!
லட்சியப் பயணத்தில் தந்தை பெரியார் பெற்ற பெருவெற்றி இது!
ஜாதி, தீண்டாமை ஒழிப்புக் களத்தில் மற்றுமோர் அமைதிப் புரட்சி இது!

தமிழ்நாடு அரசின் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் நியமனங்கள் சட்டப்படி செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்றும், முதலமைச்சர் மு..ஸ்டாலின், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, வழக்குரைஞர்கள், அதிகாரிகள் ஆகியோருக்குப் பாராட்டுத் தெரிவித்தும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு:

திராவிட மாடல்' ஆட்சி என்ற பெருமைக்குரிய ஆட்சியாக தி.மு.. ஆட்சியின் மகுடத்தில் மற்றுமோர் ஒளிமுத்து நேற்று (27.6.2022) சென்னை உயர்நீதிமன்றத்தினால் பதிக்கப்பட்டிருக்கிறது என்று எழுதினால், அது மிகையல்ல; வரலாற்று உண்மையாகும்.

1970 இல் சட்டத் திருத்தம்
    ஜாதி, தீண்டாமை ஒழிய வழிவகுக்கும் வகையில், அனைத்து ஜாதியினரும் அர்ச் சகராகும் உரிமை பெற்றவர்கள் - அவர் களுக்குரிய கல்வியைப் பெற்ற நிலையில், தமிழ்நாடு அரசின் சமத்துவக் கொள்கைக்கு தமிழ்நாட்டு சனாதன வைதீக பார்ப்பனர்கள், இதனைக் கடுமையாக 1970 முதலே - கலைஞர் ஆட்சியிலிருக்கும்போது பரம் பரை அர்ச்சகர் நியமன முறையை செல்லாததாக்கி, அதற்குரிய தகுதி படைத்த எந்த ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத் திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றினார்.

இளையபெருமாள் கமிட்டி
    இது தந்தை பெரியாரின் ஜாதி - தீண் டாமை ஒழிப்பை செயல்படுத்திக் காட்டிய அமைதிப் புரட்சிக்கான வழிமுறையாகும். அதுமட்டுமல்ல, அந்த மசோதாவை தமிழ் நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் நிறைவேற்றியபோது, அதன் நோக்கமும், காரணமும் (Objects and Reason for Bill) என்ற முகப்பில், அதற்குமுன் இருந்த - ஒன்றிய அரசு நியமித்த தீண்டாமை ஒழிப்புக்கான அனைத்திந்திய கமிட்டி - இளையபெருமாள் கமிட்டி என்று அழைக் கப்பட்ட கமிட்டியின், முக்கிய பரிந்துரையை ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முறையாக தமிழ்நாடு அரசால் - (‘திராவிட மாடல்' என்ற காரணத்தாலும், தத்துவத் தாலும்) நிறைவேற்றி வைக்கப்படுகிறது என்று கூறி, நிறைவேற்றினார்.

உச்சநீதிமன்றம் வைத்த நிபந்தனை
    இதை எதிர்த்து சிறீபெரும்புதூர் ஜீயர், காஞ்சி சங்கராச்சாரியார் (ஜெயேந்திரர்), இராஜகோபாலாச்சாரியார் முயற்சிகளைப் பின்னணியாகக் கொண்டு இந்த வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு - சென்னை உயர்நீதி மன்றத்திற்கே செல்லாமல்நேரடியாக எடுத்துச் சென்று, அந்நாளில் பிரபலமாக இருந்த பல்கிவாலா என்ற மூத்த வழக்குரை ஞரை வைத்தும், மற்ற சீனியர் வக்கீல்களை வைத்தும் வாதாடினார்கள். தமிழ்நாடு கொண்டு வந்த அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் சட்டமும், பாரம்பரிய அர்ச் சகர் நியமன முறை செல்லாது என்பதுமான சட்டமும் செல்லும் என்று தீர்ப்பளித்துவிட்டாலும், அர்ச்சகர்களை நியமிக்கும்போது அவர்கள் ஆகமப் பயிற்சி பெற்றவர் களாகவே இருப்பது முக்கியம் என்று ஒரு நிபந்தனை விதித்தார்கள்.

69 சதவிகித அடிப்படையில்,
பார்ப்பனர் முதல்,ஆதிதிராவிடர்வரை...
    அதை மீண்டும் கலைஞர் 2006 இல் முதலமைச்சரான நிலையில், ஜஸ்டீஸ் .கே.ராஜன் தலைமையில் அறநிலையப் பணி களில் மிகுந்த அனுபவம் வாய்ந்த வல்லுநர் களை இணைத்து, குழு போட்டு, அவர்கள் தந்த அறிக்கையின்படி, இரண்டு அர்ச்சகர் பயிற்சியை, சிவஆகமம், வைகனாச ஆக மம் போன்ற சிவன் கோவில், விஷ்ணு கோவில் அர்ச்சகர் தகுதிக்கேற்ப பாடத் திட்டங்கள், பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.  69 சதவிகித அடிப்படையில், பார்ப் பனர் முதல், ஆதிதிராவிடர்வரை அனைத்து ஜாதி மாணவர்களும், 210 பேர் படித்து முடித்தாலும், இதையும் எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மீண்டும் அர்ச்சகர் சங்கம் முதலியன இணைந்து - பார்ப்பனர்கள் வழக்குப் போட்டு, நீண்ட காலம் நடந்து, 2015 இல் தீர்ப்பு கிடைத்தது. அதிலும், தமிழ்நாடு அரசின் அர்ச்சகர் நியமனம் - அனைத்து ஜாதியினருக்கும் வாய்ப்பளிக்கும் தீண் டாமை ஒழிப்பு அம்சம் அடங்கிய சட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்தது, தனிப்பட்ட முறையில் - யாராவது இந்த நியமனம்மூலம் பாதிக்கப்பட்டால், அவர் தனது உரிமையை நிலைநாட்ட நீதிமன்றத்திற்குச் சென்று பரி காரம் தேடிக்கொள்ளலாம் என்று தீர்ப்பளித்தனர்.

இதையும் தங்களுக்கே வெற்றி என்பது போல, குட்டையைக் குழப்பினர் பார்ப் பனர்களும், பல ஊடகங்களும் (ஏன் சில ஓய்வு பெற்ற நீதிபதிகளும்கூட). நாம் தெளிவுபடுத்தி தி.மு..வுக்கு இது வெற்றி என்பதை விளக்கி எழுதினோம், பேசினோம்.

‘‘தந்தை பெரியாரை அரசு மரியாதை யுடன் புதைக்க முடிந்த தம்மால், தமது அரசால் - அவர் நெஞ்சில் தைத்த முள்ளை - (அனைத்து ஜாதியினர் அர்ச்சகராவதைஎடுக்க முடியாமல் புதைக்க வேண்டிய தாயிற்றே'' என்ற ஆதங்கத்தைத் தெரிவித்து, வருந்தினார் முத்தமிழ் அறிஞர் முதலமைச்சர் கலைஞர்.

ஒரு துளி ரத்தம் சிந்தாத அமைதிப் புரட்சி
    அந்த ஆதங்கத்தைப் போக்கினார் - அவருக்குப் பிறகு இடைவெளி ஏற்பட் டாலும், மீண்டும் ஆட்சிக்கு வந்தமுத்து வேல் கருணாநிதி ஸ்டாலின்' என்று கம் பீரமாக உச்சரித்துப் பதவியேற்ற நமது முதலமைச்சர். ஒரு பெரிய சமூகப் புரட்சியை ஒரு துளி ரத்தம் சிந்தாத அமைதிப் புரட்சி - அரசுப் புரட்சியாக - 14.8.2021 இல் பயிற்சி பெற்ற அனைத்து ஜாதி - ஆதிதிராவிடர் உள்பட அர்ச்சகர் நியமனங்கள் செய்து வரலாறு படைத்தார்.

இதை எதிர்த்து இப்போதும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் போட்டனர் பார்ப்பனர்கள்!

அந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமை யில் (முதல் அமர்வு) நேற்று முன்னாள் (26.6.2022) அருமையான தீர்ப்பு வழங்கி, தமிழ்நாடு அரசின் அர்ச்சகர் நியமனங்கள் சட்டப்படி செல்லுபடியாகும்; காரண முறைப் படி - அறங்காவலர்களும், அவர்கள் இல் லாத கோவில்கள் உரிமை பெற்ற தக்கார் களாலும் இந்த நியமனங்கள் முறைப்படியே நடைபெற்றுள்ளன என்று தெளிவுபடுத்திய தோடு, முந்தைய உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் படிதான் நியமனங்கள் நடைபெற்றுள்ளன என்றும் கூறியிருக்கிறது.

லட்சியப் பயணத்தில் தந்தை பெரியார் பெற்ற பெருவெற்றி  இது!

ஜாதி, தீண்டாமை ஒழிப்புக் களத்தில் மற்றுமோர் அமைதிப் புரட்சி இது!

முன்பு உச்சநீதிமன்றத் தீர்ப்பின் இறுதி யில் குறிப்பிட்டபடி, தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டதாக எவராவது இதுபோன்ற நியமனங்களின்போது கருதினால், அவர்கள் நீதிமன்றம் சென்று பரிகாரம் தேடிக்கொள் ளலாம் என்று கூறியிருக்கிறது.

தமிழ்நாடு அரசின் அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், அரசு வழக்குரைஞர் அருண்நடராஜன் ஆகியோர் சிறப்பாக வாதாடினர்.

நமது பாராட்டும், நன்றியும்!
    இந்த வெற்றிக் கனியைப் பறித்த நமது முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு..ஸ்டாலின், அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் அத் துறை அதிகாரிகள், சட்ட நிபுணர்கள் அனைவருக்கும் நமது பாராட்டும், நன்றியும்!

எஞ்சிய நியமனங்கள் உடனடியாக தொடரப்படவேண்டும். பயிற்சிப் பள்ளியும், பணிகள் தேர்வும் தொடரப்படவும்வேண்டும்!

 கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
28.6.2022


No comments:

Post a Comment