பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். கூட்டை முறியடிப்போம் து.ராஜா முழக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 12, 2022

பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். கூட்டை முறியடிப்போம் து.ராஜா முழக்கம்

திருச்சி,ஜூன்11-  திருச்சியில் செய்தியாளர்களிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் து. ராஜா  நேற்று (10.6.2022) கூறியதாவது: 

இந்திய அரசியல் தற்போதுபெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளது. பாஜக, ஆர்.எஸ்.எஸ். கூட்டு சேர்ந்து, நாட்டின் அரசமைப்பு சட்டத்தை திருத்தி அமைக்க முயற்சிக்கின்றன.

சமீபத்தில் பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் நூபுர் சர்மா, முகமது நபிகள் குறித்து தெரிவித்த கருத்துக்கு பல்வேறு நாடுகளில் கண்டனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

இந்தியா குடியரசு நாடாக தொடர்ந்து நீடிக்க வேண்டுமானால் மதச்சார்பற்ற அனைத்து சக்தி களும் ஒன்றிணைய வேண்டும். ரூபாய் மதிப்பு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடும் வீழ்ச்சியடைந்து வருகிறது.

இது நாட்டின் பொருளாதாரம் நிலைகுலைந் திருப்பதைக் காட்டுகிறது. வேலையில்லா திண்டாட் டம் பெருகிவிட்டது. விலைவாசி உயர்ந்துவிட்டது.

குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளுடன் பேச்சுவார்த்தை தொடங்கி யுள்ளது. மதச்சார்பற்ற, இந்திய குடியரசு மீது நம் பிக்கை கொண்டவர்தான், வேட்பாளராக வர வேண்டும்.

நாட்டில், பாஜகவுக்கு எதிராக உள்ள மாநிலக் கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டால் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவின் வெற்றி கேள்விக் குறியாகிவிடும். இவ்வாறு அவர் கூறினார். 

கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


No comments:

Post a Comment