மருத்துவ சாதனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 25, 2022

மருத்துவ சாதனை

பாம்பு கடித்ததில் சிறுநீரக செயலிழப்பு: 6 வயது சிறுவனுக்கு அரசு மருத்துவமனையில் உறுப்பு மாற்று சிகிச்சை

சென்னை, ஜூன் 25 பாம்பு கடித் ததில் சிறுநீரக செயலிழப்புக்குள் ளான 6 வயது சிறுவனுக்கு உறுப்பு மாற்று சிகிச்சை மூலம் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத் துவர்கள் மறுவாழ்வு அளித்துள் ளனர்.

தற்போது அச்சிறுவன் பூரண குணமடைந்து பள்ளிக்குச் சென்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் முதல்வர் மருத்துவர் தேரணிராஜன் கூறியதாவது:

கோபிசெட்டி பாளையத்தைச் சேர்ந்த ஆறு வயது சிறுவன் ஒருவர் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு அவரது தாயார் பணி முடிந்து வீடு திரும்பிய போது அச்சிறுவன் மயங்கிய நிலையில் இருந்ததாகத் தெரிகிறது.

மருத்துவப் பரிசோதனையில் சிறுவனை பாம்பு கடித்தது உறுதி செய்யப்பட்டது. இதன் காரண மாக அவருக்கு சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் எட்டு மாதமாக டயாலிசிஸ் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இருப்பினும் அப்பிரச்சினை சீராகவில்லை. 

இதையடுத்து சிறுவனுக்கு சிறு நீரக மாற்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய அவசியம் எழுந்தது. ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு, மருத்துவமனையின் சிறுநீரகவியல் துறைத் தலைவர் டாக்டர் கோபால கிருஷ்ணன் தலைமையில் எழும்பூர் குழந்தைகள் நல மருத் துவமனை மருத்துவர்கள், மயக்க வியல், ரத்தநாள சிகிச்சை நிபு ணர்கள் இணைந்து சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற் கொண்டனர். சிறுவனின் தாயே அவருக்கு சிறுநீரக கொடையளித் தார். வெற்றிகரமான சிகிச்சையின் பயனாக அச்சிறுவன் பூரண நலமடைந்து தற்போது பள்ளிக்குச் செல்லும் நிலைக்கு திரும்பியுள் ளார். 

ராஜீவ் காந்தி மருத்துவ மனையில் இதுவரை 1,540 பேருக்கு சிறுநீரக மாற்று சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அண்மையில் எச்அய்வி தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு சிறு நீரக மாற்று சிகிச்சை மேற்கொள் ளப்பட்டுள்ளது என்றார் 


No comments:

Post a Comment