உலகின் முதல் ஒளிச் சில்லு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 30, 2022

உலகின் முதல் ஒளிச் சில்லு!

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பேராசிரியர் ஹரீஷ் பாஸ்கரன் தலைமையிலான விஞ்ஞானிகள், உலகிலேயே முதல் முறையாக, ஒரு புது வகை சில்லை உருவாக்கிஉள்ளனர்.

தகவல்களை அதிவேகமாக அலசும் இச்சில்லுகள், நேனோ கம்பிகள் மூலம் ஒளிக் கதிர்களை கடத்துகின்றன.மின்சாரத்திலுள்ள எலெக்ட்ரான்களைவிட, ஒளிக் கதிரிலுள்ள போட்டான்கள் அதிவேகமாக பயணிப்பவை என்பதால், ஒளியால் இயங்கும் சில்லின், தகவல் அலசல் வேகம் பன்மடங்கு இருக்கும். தவிர, ஒளிக் கதிரில் பல அலைவரிசைகள் இருக்கும். இந்த ஒவ்வொரு அலைவரிசையும் இன்னொன்றுடன் குறுக்கிடாமல் பயணிக்கும். எனவே பலவகை தகவல்களை ஒரே ஒளிக் கதிரில் செலுத்த முடியும்.

அதேபோல, ஒளிக் கற்றை மூலம் அதிக அடர்த்தியான தகவல்களை அனுப்பலாம். ஒளியால் தகவல்களை பரிமாறி அலசும் சில்லு ஒரு சிறிய துவக்கம் தான். அடுத்து வரும் ஆண்டுகளில், சில்லு உலகில், எலெக்ட்ரானிக்ஸ் துறையின் இடத்தை, போட்டோனிக்ஸ் கைப்பற்றப்போகிறது. தகவல் பரிமாற்றம் மற்றும் அலசல்களுக்கு ஒளிக் கதிர்கள் புரட்சிகரமான வசதிகளைத் தரப்போகின்றன.

போட்டோனிக் சில்லுகள் புழக்கத்திற்கு வருகையில், செயற்கை நுண்ணறிவு, அதிதிறன் கணினி ஆகிய துறைகள் வேகமெடுக்கும்.


No comments:

Post a Comment