பல மாநிலங்களில் டீசல், பெட்ரோலுக்கு தட்டுப்பாடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 16, 2022

பல மாநிலங்களில் டீசல், பெட்ரோலுக்கு தட்டுப்பாடு

புதுடில்லி,ஜூன்16- நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல், டீசல் பயன்பாடு திடீரென அதிகரித்து இருக் கிறது. குறிப்பாக தனியார் விற்பனை நிலையங்களை விட, இந்தி யன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோ லியம், பாரத் பெட்ரோலியம் போன்ற பொதுத்துறை நிறுவனங்களின் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் (பங்க்) விற்பனை அதிகரித்து வருவ தாக அந்தந்த நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன. 

இதனால் அந்தந்த மாநிலங்களில் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பெட்ரோல்-டீசலுக்கு கடும் தட்டுப் பாடு ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், கருநாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பல விற்பனை நிலையங்கள், பெட் ரோல்-டீசல் இன்றி மூடப்பட்டு உள்ளன. இதனால் பெரும்பாலான பெட்ரோல் விற்பனை நிலையங்களில் வாகன ஓட்டிகள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை உருவாகி உள்ளது. இது அந்த மாநிலங்களில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக் கிறது. ஆனால் இத்தகைய கூடுதல் தேவை யையும் சமாளிக்கும் வகையில் நாடு முழுவதும் போதுமான அளவுக்கு பெட்ரோல்-டீசல் கையிருப்பு உள்ள தாக ஒன்றிய அரசு கூறியுள்ளது. 

 தமிழ் நாட்டிலும் தட்டுப்பாடு 

தமிழ்நாட்டிலும் சில இடங்களில் பெட்ரோல்-டீசல் தட்டுப்பாடு ஏற் பட்டு  உள்ளது. தேனி, பெரியகுளம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட இடங்களில் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சமீப காலம் வரை எண்ணெய் நிறுவனங்கள் பெட் ரோல்-டீசலை விற்பனை நிலையங் களுக்கு வினியோகம் செய்த பிறகு, அதற்கான தொகையை குறிப்பிட்ட கால நேரத்தில் பெற்று வந்தன. இனி முன்பணம் செலுத்தும் சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மட்டுமே பெட்ரோல்-டீசல் வினியோகத்தை எண்ணெய் நிறுவனங்கள் மேற் கொள்ள இருக்கின்றன. இதுவும் தட் டுப்பாட்டுக்கு காரணமாக கூறப்படு கிறது. இதுகுறித்து தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்க மாநிலத் தலைவர் கே.பி.முரளி கூறுகையில், 'எண்ணெய் நிறுவனங்கள் இதுபோன்ற கட்டுப்பாடுகளை உடனே கொண்டுவரக்கூடாது. இத னால் சில்லறை விற்பனை நிலையங் களின் உரிமையாளர்கள் பாதிக்கப்படு வார்கள். இதனால் பெட்ரோல்-டீசல் வினியோகம் பாதிக்க வாய்ப்பு இருக் கிறது. எனவே இதனை சரியான முறை யில் கையாள வேண்டும்' என்றார்.


No comments:

Post a Comment