சென்னையில் 1,033 கி.மீ., அளவில் மழைநீர் வடிகால் பணிகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 16, 2022

சென்னையில் 1,033 கி.மீ., அளவில் மழைநீர் வடிகால் பணிகள்

சென்னை, ஜூன் 16 சென் னையில் 1033 கி.மீ., அளவில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளை செப்டம்பர் இறு திக்குள் முடிக்க சென்னை மாநகராட்சி தீவிரம் காட்டி வருகிறது. 

பருவமழை தொடங்க உள் ளதால் தாழ்வான பகுதிகளுக்கு முன்னுரிமை கொடுத்து இப் பணிகள் வேகப்படுத்தப்பட்டு வருகிறது. சென்னையில், ஒவ் வொரு மழை காலத்திலும் மழை நீர் தேங்குவதும், மக்கள் முக்கிய பொருட்களுடன் மொட்டை மாடியில் தஞ்சமடைவதும், அதிகாரிகள் பார்வையிடுவதும் வழக்கமான ஒன்றாக இருக்கிறது. ஆனால் மழை நீர் தேங்காத வகையில் முழு அளவில் நடவடிக்கை எடுக்க முதலமைச்சராக பொறுப் பேற்ற நிலையில் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.

அதன் அடிப்படையில், திமுக அரசு பொறுப்பேற்றவு டன் முதலில் சென்னை மாநக ராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை நீர் வடிகால்களை தூர் வாரும் பணிகளை செய்தது. சென்னையில் அதிகபட்ச மழை கடந்த நவம்பரில் பெய்ததால் தலைநகரமே நீரில் தள்ளாடியது. இந்த மழை பாதிப்பை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அடுத்த பருவமழையின் போது மழைநீர் தேங்காத வகை யில் மழைநீர் வடிகால்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றார்.

அதற்கேற்ப பேரிடர் மேலாண்மை துறையில் அனு பவம் வாய்ந்த திருப்புகழ் அய்ஏஎஸ் அதிகாரி தலைமை யில் மழைநீர் தேங்கும் பிரச் சினையை முடிவுக்கு கொண்டு வர ஒரு குழுவை அமைத்தார். அந்த குழு சென்னையில் மழை தேங்கும் பகுதிகளை ஆய்வு செய்து அறிக்கை தயாரித்தது. அந்த குழுவினரின் அறிக்கை யின் படி, சென்னையில் அதிக அளவு நீர் தேங்கும் 20 இடங் களில் புதிதாக மழைநீர் வடி கால்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment