இந்தியில் உள்ள ஒரே இதிகாசம் துளசிதாஸ் இராமாயணமே! பிராமணனை வணங்குவதுதான் மோட்சத்திற்கு வழி என்கிறான் ராமன் இவற்றைக் கூறும் இந்தி நமக்குத் தேவையா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 20, 2022

இந்தியில் உள்ள ஒரே இதிகாசம் துளசிதாஸ் இராமாயணமே! பிராமணனை வணங்குவதுதான் மோட்சத்திற்கு வழி என்கிறான் ராமன் இவற்றைக் கூறும் இந்தி நமக்குத் தேவையா?

இந்தி எதிர்ப்பு மாநாட்டில் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் கேள்வி

சென்னை, ஜூன் 20  இந்தியில் உள்ள ஒரே இதிகாசம் துளசிதாஸ் இராமாயணம். அதில் இராமன் கூறுகிறான், பிராமணனை வணங்குபவன்தான் மோட்சத்திற்குப் போவானாம். இப்படிக் கூறும் இந்தி நமக்குத் தேவையா? என்றார்  திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள். 

இந்தி எதிர்ப்பு மாநாடு

கடந்த 4.6.2022  அன்று மாலை    சென்னை சைதாப் பேட்டை தேரடி வீதியில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் சிறப்புரையாற்றினார். அவரது சிறப்புரை வருமாறு:

இந்த சைதையில் எத்தனையோ நிகழ்ச்சிகளை திராவிடர் கழகம் நடத்தியிருக்கிறது. சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் உள்பட திராவிடர் கழகத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் இதே இடத்தில் பங்கேற்று உரையாற்றி இருக்கிறார்.

1926 ஆம் ஆண்டிலேயே எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்

இந்தி எதிர்ப்பு என்பது ஒரு கலாச்சாரப் படையெடுப்பு, பண்பாட்டுப் படையெடுப்பு என்று தந்தை பெரியார் அவர்கள் தொடக்கத்திலே, இன்னும் சொல்லப்போனால், 1926 ஆம் ஆண்டிலேயே எடுத்துச் சொல்லியிருக் கிறார்கள்.

தொடர்ந்து பல்வேறு போராட்டங்களையும், மாநாடு களையும் நாம் நடத்தி வந்திருக்கின்றோம்.

எனக்கு முன்னால் பேசிய பிரச்சார செயலாளர் சொன்னதுபோல, இந்தி என்பது இலக்கிய நலன் சார்ந்ததல்ல. வெறும் புராண குப்பைகள் என்று சொன்னார். அதில் ஒன்றுதான், துளசிதாஸ் இராமாயணம். 

துளசிதாஸ் இராமாயணம்

அதில் உள்ள ஒரே ஒரு பகுதியைச் சொல்லி நான் தீர்மானத்திற்கு வருகின்றேன்.

அதில் என்ன சொல்கிறார்கள்? பிராமணர்கள் பாதங்களில் குறையாத பக்தியை வைப்பதுதான் மோட்சம் அடைவதற்குரிய எளிய வழியாகும்.

வேதங்கள் கற்பிப்பதற்கு ஏற்ப, ஒருவன் ஜாதிக்கு விதிக்கப்பட்ட கடமையை நிறைவேற்றவேண்டும்.

ராமன் சொல்லுகிறான்,

பிராமணர்களை வெறுப்போர் என்னால் விரும்பப் படமாட்டார்கள்.

பிராமணர்களின் செல்வாக்குக்கு உள்பட்டு இருக்கின்ற பிரம்மாவும், சிவனும், பிற கடவுளரும் பிராமணர்களை விசுவாசத்துடன் வழிபடுகின்றனர்.

பிராமணன் ஒருவன் சாபம்  கொடுத்தாலும், கொலை செய்தாலும், கொடிய சொற்களைப் பேசினாலும்கூட, அந்த பிராமணன் வழிபடத்தக்கவனே!

இந்த உலகில் ஒருவன் செய்யத்தக்க நற்செயல் ஒன்றே ஒன்றுதான். அதற்கு இணையாக வேறு எதையும் செய்ய முடியாது.

அந்த நற்செயல் என்பது, பிராமணர்கள், ரிஷிகள், முனிவர்கள் பாதங்களை வணங்குவதுதான்.

இவ்வாறு செய்தால், கடவுள் மிகுந்த மகிழ்ச்சிய டைவார்.

துளசிதாஸ் இராமாயணத்திலிருந்துதான் சொல் கிறேன்.

துவிஜர்களான இரு பிறப்பாளர்களுக்குத் தொண்டு செய்வது கடவுளை மகிழ்விக்கிறது.

பிராமணர்களை அவமதிக்காதே - அவன் ஆண் டவனுக்குச் சமமானவன் என்பதை அறிந்துகொள்!

பிராமணனைத் திட்டுகிறவன் பல நரகங்களில் வாழ்ந்து அடுத்த ஜென்மத்தில் காக்கையாகப் பிறப்பான் என்கிறது துளசிதாஸ் ராமாயணம்.

இப்பொழுது திரிகிற காக்கையெல்லாம் யார் என்றால், போன ஜென்மத்தில் பிராமணர்களைத்  திட்டியவர்களாம்.

இன்னொரு சாஸ்திரம் சொல்கிறது, போன ஜென் மத்தில் சுருட்டுப் பிடிக்கும் பிராமணர்கள், அடுத்த ஜென்மத்தில் பன்றியாக வருவார்கள்.

இப்படியாக ஒரு இராமாயணம், ஹிந்தி இராமாயணம், துளசிதாஸ் இராமாயணம் என்பது எடுத்துக்காட்டிற்காக ஒன்று சொல்கிறேன்.

அடுத்து தீர்மானத்திற்கு வருகிறேன்.

(12 தீர்மானங்களையும் முழுவதுமாகப் படித்தார்).

தீர்மானங்களை வழிமொழிகின்ற வகையில், அனை வரும் எழுந்து நின்று கையொலி எழுப்புமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

- இவ்வாறு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

No comments:

Post a Comment