இந்தி எதிர்ப்பு கருத்தரங்கத் துளிகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 5, 2022

இந்தி எதிர்ப்பு கருத்தரங்கத் துளிகள்

நேற்று 4.6.2022 முற்பகல் சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தின் துளிகள்.

சு. குமாரதேவன் வழக்குரைஞர்

"இன்னும் எவ்வளவு காலத்திற்கு இந்தி எதிர்ப்பு மாநாடுகளையும், போராட்டங்களையும் நடத்திக் கொண்டிருப்பது?"

சிவிஎம்பி எழிலரசன் எம்.எல்.ஏ.

சமூகநீதி - மதவாத எதிர்ப்பு - மொழித் திணிப்பு எதிர்ப்பு - இவைகளை முன்னெடுக்கும்  தமிழர் தலைவர் தலைமை தாங்கும் திராவிடர் கழகத்தின் செயல்பாடுகளுக்கு திமுக இளைஞரணி துணை இருக்கும்  - தோளோடு தோள் துணை நிற்கும்.

முனைவர் மறைமலை இலக்குவனார்

இந்தி எதிர்ப்பு குமரி முதல் காஷ்மீர் வரை இருக்கிறது. தமிழர் தலைவர் தலைமை தாங்கி டில்லி, கொல்கத்தா, மும்பை முதலிய முக்கிய நகரங்களில் இந்தி எதிர்ப்பு மாநாடுகளை நடத்த வேண்டும்.

ஆளூர் ஷாநவாஸ் எம்.எல்.ஏ.,

இந்தி திணிப்பு முறைகளை மாற்றி மாற்றி எங்களிடம் புகுத்தினால் நாங்களும் எங்கள் போராட்ட முறைகளையும் மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும்.

புலவர் பா. வீரமணி

இந்தி எதிர்ப்பு என்பது- மனித உரிமைப் போர் - சித்தாந்த ரீதியான  (Ideological) போர். 1937-1938இல் தந்தை பெரியார் தலைமையில்  நடத்தப்பட்ட இந்தி எதிர்ப்புப் போரட்டம்தான் - தமிழ்நாட்டின் திருப்புமுனை.

பேராசிரியர் முனைவர் 

ந.க. மங்களமுருகேசன்

இந்தி சமஸ்கிருதத் திணிப்பு புகுத்தப்பட்டால் நம் இனத்தின் பண்பாடு அழிக்கப்படும். அன்னை மணியம்மையார் சிறை சென்றது. முதன் முதலாக இந்தி - எதிர்ப்புப் போராட்டத்தில்தான் 1948இல்.

பிரின்ஸ் கஜேந்திரபாபு

தேசிய கல்விக் கொள்கை அல்ல; இந்தி சமஸ்கிருதத்தைத் திணிக்கும் குலக் கல்வி திட்டம் ஆளுநர் எங்களைச் சீண்டிப் பார்ப்பது சரியல்ல.

தமிழர் தலைவர்

இங்கு நடைபெற்றது கருத்தரங்கமல்ல - ஆய்வரங்கம்! இவை தொகுக்கப்பட்டு நூலாக வெளிவரும்.

1926ஆம் ஆண்டிலேயே சித்திரபுத்திரன் என்ற புனைப் பெயரில் தந்தை பெரியார் "தமிழிற்குத் துரோகமும் இந்தியின் ரகசியமும்" எனும் தலைப்பில் குடிஅரசில் எழுதி (7.2.1926) இந்தி வெறியர்களை எச்சரித்தார்.

எதிர்ப்போம்

எதிர்ப்போம்

இந்தியை எதிர்ப்போம்

வீழ்த்துவோம் - வீழ்த்துவோம்

பண்பாட்டுப் படையெடுப்பை வீழ்த்துவோம்

என்று  திராவிடர் கழகத் தலைவர் முழக்கமிட கூடியிருந்த அனைவரும் தொடர்ந்து முழக்கமிட்டனர்.


No comments:

Post a Comment