தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமர் மோடிக்கு இப்படியும் எழுதலாமே!
பிரதமர் மோடி அவர்களே, தமிழ்நாட்டில் மட்டும் மதுபானங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்களே, உங்கள் குஜராத்தில் ஊற்றிக் கொடுப்பது மதுவல்ல - மோடி பானமா?
ஆண்டு ஒன்றுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு என்று சொன்னீர்களே!
அதைத்தான் இப்பொழுது அக்னிபத் என்ற முறையில் அரசு செலவில்
ஆர்.எஸ்.எஸ். பயிற்சி கொடுக்கப் போகிறீர்கள். 4 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் கைகளில் எல்லாம் புல்டோசரைக் கொடுத்து அடுத்த மதக்காரர்களின் கோவில்களையும், வீடுகளையும் இடித்துப் பொடிமாஸ் செய்வீர்கள்.
முஸ்லிம் பெண்கள் மேலாடை (ஹிஜாப்)அணிந்திருந்தால் அதைக் கிழிக்கச் செய்வீர்கள்.
பக்கோடா விற்பதும் ஒரு வேலைதான், அதைப் போய் செய்ய வேண்டியதுதானே என்பீர்கள்.
எதிர்க்கட்சிகள் கூட்டம் நடத்தினால் அங்கு சென்று கலவரத்தை உண்டாக்குவதற்கான பயிற்சிகளைக் கொடுக்கமாட்டீர்களா?
நான்கூட டீ விற்று இப்பொழுது பிரதமர் ஆகவில்லையா? நீங்கள் 'ட்ரை' பண்ணுங்கள் 'பாரத' பிரதமர் ஆகிவிடலாம்!
இன்னொன்று எங்கெங்கெல்லாம் மாட்டுக்கறி உணவு விற்பனை செய்யப்படுகிறதோ, அங்கெல்லாம் சென்று சண்டியர்த்தனம் செய்யுங்கள்.
பணத்தைப்பற்றியெல்லாம் கவலைப்படாதீர்கள். அது ஆறாக ஓடும். அதானி, அம்பானி எல்லாம் எதற்கு இருக்கிறார்கள்? 60 ஆயிரம் கோடி ரூபாய் நன்கொடை கொடுப்பதாக அறிவித்துள்ளனர் என்றால், சும்மாவா?

No comments:
Post a Comment