புதுடில்லி, ஜூன் 11- இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று (11.6.2022) காலை வெளியிட்டது. அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8 ஆயிரத்து 329 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால், நாட்டில் கரோனா பாதிக்க பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 32 லட்சத்து 13 ஆயிரத்து 435 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பில் இருந்து 4 ஆயிரத்து 216 பேர் குணமடைந்துள்ளனர்.
இதனால், இந்தியாவில் கரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண் ணிக்கை 4 கோடியே 26 லட்சத்து 48 ஆயிரத்து 308 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 40 ஆயிரத்து 370 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 24 ஆயிரத்து 757 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 194 கோடியே 92 லட்சத்து 71 ஆயிரத்து 111 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட் டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச் சகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில்
தமிழ்நாட்டில் நேற்றைய (10.6.2022) கரோனா பாதிப்பு குறித்து தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டி ருப்பதாவது:
நேற்று புதிதாக 13 ஆயிரத்து 180 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஆண்கள் 121 பேரும், பெண்கள் 98 பேரும் உள்பட 219 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அந்தவகையில் 96 நாட்களுக்கு பிறகு தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு 200-அய் தாண்டியுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 129 பேர், செங்கல்பட்டில் 41 பேர் உள்பட 13 மாவட் டங்களில் தொற்று பதிவாகி உள்ளது. 25 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை. 12 வயதுக்கு உட்பட்ட 6 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 40 பேரும் நேற்று கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் 7 மாவட்டங்கள் மட்டுமே கரோனாவே இல்லாத மாவட்டங்களாக உரு வாகி உள்ளன. இந்த மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கரோனா தொற்றும் இல்லை, சிகிச் சையிலும் யாரும் இல்லை. தமிழ்நாட்டில் 85ஆவது நாளாக எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை. இதுவரை 38 ஆயிரத்து 25 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்து உள்ளனர். மேலும் நேற்றைய நிலவரப்படி 1,159 பேர் கரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக சென்னையில் 641 பேரும், செங்கல்பட்டில் 216 பேரும் சிகிச்சையில் உள்ளனர். தமிழ்நாட்டில் 60 பேர் மருத்துவமனை சிகிச்சையில் அனுமதிக்கப் பட்டு உள்ளனர். 137 பேர் கரோனா நோயில் இருந்து குணமடைந்தனர்.
இதுவரை தமிழ் நாட்டில் 34 லட்சத்து 17 ஆயிரத்து 732 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பி யுள்ளனர்.
- இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
12ஆம் தேதி 1 லட்சம் இடங்களில் தடுப்பூசி முகாம்
சென்னை, ஜூன் 11- கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கும் வேளையில் தமிழ் நாட்டில் நாளை (12 -ஆம் தேதி) ஒரு லட்சம் இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடத் தப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடையே அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
கரோனா தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து கூடிக்கொண்டிருக்கிறது. தினந் தோறும் 15 முதல் 20 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப் பட்டால், அனைவருக்கும் தடுப்பூசி போட தாமதமாகும் என்பதால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி மெகா தடுப்பூசி முகாம் கடந்த மாதம் ஒரே நாளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப் பட்டு, 17.75 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப் பட்டது. அந்த வகையில் நாளை 12-ஆம் தேதி மீண்டும் ஒரு லட்சம் இடங்களில் தமிழ்நாடு முழுவதிலும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது என்றார்.

No comments:
Post a Comment