கும்பகோணம் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 714 பேருக்கு பணி நியமன ஆணைகள்: அமைச்சர்கள் வழங்கினர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 13, 2022

கும்பகோணம் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 714 பேருக்கு பணி நியமன ஆணைகள்: அமைச்சர்கள் வழங்கினர்

திருவிடைமருதூர், ஜூன் 13 கும்பகோணத்தில் நடந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 714 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கணேசன் ஆகி யோர் வழங்கினர். 

வேலைவாய்ப்பு முகாம் கும்ப கோணத்தை அடுத்த தாராசுரம் பகுதியில் உள்ள கே.எஸ்.கே. என்ஜினீயரிங் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மய்யம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமை நடத்தின. முகா முக்கு தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். 

நாடாளு மன்ற உறுப்பினர்கள் கல்யாண சுந்தரம், ராமலிங்கம், அரசு கொறடா கோவி செழியன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். 

முகாமில் 130-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு ஆட்களை தேர்வு செய்தனர். 714 பேருக்கு பணி நியமன ஆணை இதில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு தனியார் நிறுவனங்கள் நடத்திய நேர்முக தேர்வில் தேர்வு செய்யப்பட்ட 714 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினர். முகாமில் 416 பேர் இரண்டாம் கட்ட தேர்வுக்கும், 64 பேர் திறன் பயிற்சிக்கும் தேர்வு செய்யப்பட் டனர். 

இதில் கூடுதல் ஆட்சியர் (வருவாய்) சுகபுத்ரா, சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பழகன், துரை. சந்திரசேகரன், கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன், துணை மேயர் சுப தமிழழகன், கோட்டாட்சியர் லதா, மாநகராட்சி ஆணையர் செந்தில்முருகன், மண்டல இணை இயக்குநர் சந்திரன், உதவி இயக்குநர் மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கம் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மய்யத்தை சேர்ந்த ரமேஷ் குமார், ஒன்றியக்குழு தலைவர் காயத்ரி அசோக்குமார், கே.எஸ்.கே. என்ஜினீயரிங் கல்லூரி தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மண்டல குழு தலைவர் அசோக்குமார் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment