உளுந்தூர்பேட்டை, களத்தூர், சேந்தநாடு பகுதிகளில் (26.6.2022) தமிழர் தலைவர் கழகக் கொடியேற்றி - கல்வெட்டைத் திறந்து வைத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 28, 2022

உளுந்தூர்பேட்டை, களத்தூர், சேந்தநாடு பகுதிகளில் (26.6.2022) தமிழர் தலைவர் கழகக் கொடியேற்றி - கல்வெட்டைத் திறந்து வைத்தார்

திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே ஏராளமான திராவிடர் கழகத் தோழர்கள் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து உற்சாக வரவேற்பளித்தனர். உளுந்தூர்பேட்டை  திராவிடர் கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கழகக் கொடியினை ஏற்றி வைத்தார் தமிழர் தலைவர். உடன் கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், கோ.சா.பாஸ்கர், கல்லக்குறிச்சி சுப்பராயன், திண்டிவனம் இளம்பரிதி மற்றும் தோழர்கள் 

களத்தூர் கிராமத்தில், கிராம மக்களும், கழகத் தோழர்களும் இணைந்து உருவாக்கிய கொடிக் கம்பத்தில், கழகத் தலைவர் தமிழர் தலைவர் கழகக் கொடியினை ஏற்றி வைத்து, கல்வெட்டினைத் திறந்து வைத்தார்.

சேந்தநாடு பேருந்து நிலையம் அருகே ஏராளமான பொதுமக்களும், தோழர்களும் புடைசூழ கழகக் கொள்கை முழக்கமிட்டு தமிழர் தலைவர் அவர்களுக்கு உற்சாக வரவேற்பளித்தனர். திராவிடர் கழகக் கொடியினை, கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஏற்றி வைத்து, கழகக் கல்வெட்டினைத் திறந்து வைத்தார். 

படம் 1: பண்ருட்டி ஒன்றிய திமுக மேனாள் செயலாளர் பலராமன் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றார். படம் 2: விழுப்புரம் மாவட்டம் புதிய சிறகுகள் நிறுவனர் சிவராஜ் தமிழர் தலைவருக்குப் பொன்னாடை அணிவித்தும், புத்தகங்களை வழங்கியும் வரவேற்றார். படம் 3: சேந்தநாடு கூட்டத்தை சிறப்பாக ஏற்பாடு செய்த விழுப்புரம் மாவட்ட கழக செயலாளர் அரங்க.பரணிதரனைப் பாராட்டி தமிழர் தலைவர் சிறப்பு செய்தார். உடன் உளுந்தூர்பேட்டை நகராட்சி தலைவர் வழக்குரைஞர் திருநாவுக்கரசு, கடலூர் தண்டபாணி, பிரின்சு என்னாரெசு பெரியார் மற்றும் பரணிதரன் குடும்பத்தினர்.


No comments:

Post a Comment