சென்னை, ஜூன் 8 அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க் கையை அதிகரிக்கும் நோக்கில், மழலையர் வகுப்புகள் தொடங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்தது.
இதையடுத்து, அரசு நடுநிலைப் பள்ளி வளாகங்களில் உள்ள 2,381 அங்கன்வாடிகளில் மழலையர் வகுப்புகள் 2019இல் தொடங்கப்பட்டன. 3- - 4 வயது குழந்தைகள் எல்கேஜி வகுப் பிலும், 4-- 5 வயது குழந்தைகள் யுகேஜி வகுப்பிலும் சேர்க்கப் பட்டனர்.
அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி தொடங்கியதால் பெற்றோரும் ஆர்வத்துடன் தங்கள் குழந்தைகளை சேர்த்து வந்தனர். அந்த வகையில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந் தைகள்தற்போது மழலையர் வகுப்பில்படிக்கின்றனர்.
இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டு முதல் அரசுப் பள்ளி களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகள் கூறும் போது,
‘‘ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறையுடன் இணைந்து 3 ஆண்டு சோதனை முயற்சியில் இத்திட்டம் செயல் படுத்தப்பட்டது.
கரோனா பரவலுக்கு பிறகு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்ந்துள்ளதால், ஆசிரியர்கள், கட்டடங்களின் தேவை அதிகரித்துள்ளது.
இதையடுத்து, மழலையர் வகுப்புகளை அங்கன்வாடி மய்யங்களிலேயே தொடர முடி வானது.
அதற்கேற்ப, மழ லையர் வகுப்புக்கு தற்காலிக அடிப் படையில் பணியமர்த்தப் பட்ட 2,381 ஆசிரியர்கள் மீண் டும் அரசுப் பள்ளிகளுக்கு இட மாற்றம் செய்யப்பட்டனர்.
எனவே, இனி மழலையர் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை அங்கன்வாடி மய் யங்கள் மூலமாகவே நடத்தப் படும்’’ என்றனர்.
இதுகுறித்து சமூகநலத் துறை அதிகாரிகள் சிலர் கூறிய தாவது: முதல் ஆண்டில் இத் திட்டத்துக்கு பெற்றோர் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இதனால், மழலையர் வகுப்புகளின் எண்ணிக்கையை உயர்த்தவும் பரி சீலனை செய்யப் பட்டது.
மழலையர் வகுப்பு களை மூடிவிட்டு, அங்கன்வாடி மய் யங்களை முறைப் படுத்த திட்ட மிடப்பட்டுள்ளது.
அங்கன்வாடிமய்யங்களில் குழந்தைகளுக்கு எல்கேஜி, யுகேஜி பாடங்கள் கற்றுத் தரப் படாது.
ஏற்கெனவே இருந்த அடிப்படைகல்வித் திட்டமே செயல்படுத்தப்படும். அங்கன் வாடி பணியாளர்கள் குழந் தைகளை பராமரித்து பாடங் களை எடுப்பார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment