கிருஷ்ணகிரி அருகே மயிலாடும்பாறையில் 2,000 ஆண்டுக்கு முற்பட்ட கல் திட்டை கண்டுபிடிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 15, 2022

கிருஷ்ணகிரி அருகே மயிலாடும்பாறையில் 2,000 ஆண்டுக்கு முற்பட்ட கல் திட்டை கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி, ஜூன் 16- கிருஷ்ணகிரி அடுத்த மயிலாடும்பாறையில், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட, புதிய கற்கால கல்திட்டை கண்டு பிடிக் கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு முதலமைச் சர் கிருஷ்ணகிரி அடுத்த மயிலாடும்பாறையில் புதியகற்கால கல்திட்டை கண்டுபிடிக்கப் பட்டுள் ளது. தென்னிந்தியாவை பொருத்தமட்டில் இறந்த வர்களின் நினைவாக எழுப்பப்படும் பெருங்கற் படைகள், இரும்புக் காலத்தை சேர்ந்தவை எனக்கருதப்பட்டு வரும் நிலையில், தற்போது அகழாய்வு நடந்துவரும், கிருஷ்ணகிரி மாவட்டம், அய்குந்தம் பகுதியில், இக்கலாச்சார கூறுக ளான கருப்பு, சிவப்பு பானை வகை மற்றும் பெருங்கற்படைகள், புதிய கற்காலத்திலேயே தொ டங்கிவிட்டதற்கான சான்றுகள் கிடைத்து உள்ளன.

இதுகுறித்து கிருஷ்ண கிரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்த ராஜ் கூறியதாவது: அய் குந்தம் பகுதியில், மேற் கொண்ட கள ஆய்வின் போது, அய்குந்தம் தேன் மலையின் வடமேற்கு பகுதியில் ஒரு குகையில் புதிய கற்கால செங்காவி ஓவியம் கண்டறியப்பட் டது. இது பெருக்கல் குறி போன்ற உடலமைப்பை கொண்ட மனித உருவம். அண்மையில் மயிலாடும் பாறையில் நடத்தப்பட்ட அகழாய்வில், இரும்பின் பயன்பாடு 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொட ங்கிவிட்டதற்கான சான்று கிடைத்துள்ளது. அதேபோல், கருப்பு சிவப்பு பானை ஓடுகளும், புதிய கற்கால கலாச்சா ரத்தின் இறுதிக் கட்டத்தி லேயே தொடங்கிவிட்ட தாக சான்றுகள் தெரி விக்கின்றன.

பாறை ஓவியம் காணப் படும் பாறைக்கருகிலேயே, ஒரு கல்திட்டை கண்ட றியப்பட்டுள்ளது. இக் கல்திட்டை வழக்கமான கல்திட்டை போல் இல் லாமல், மிகவும் முற்பட்ட தாய் உள்ளது. இதனை ‘‘தூக்கி வைத்தான் கல்’’ என்றும் குறிப்பிடுவர். செஞ்சாந்து ஓவியம் மற்றும் இந்த கல்திட் டையும், பெருங்கற்படை காலத்தின் தொடக்கம், கிமு 1000 என்பதிலிருந்து, கிமு 2000 என்பதை உறுதிப்படுத்துகின்றன. அதாவது புதிய கற்காலத் திலேயே கருப்பு, சிவப்பு பானை வகையும் பெருங் கற்படைகளும் தோன்ற தொடங்கி விட்டன என லாம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment