பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்த 172 நிறுவனங்கள் மூடல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 5, 2022

பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்த 172 நிறுவனங்கள் மூடல்

சென்னை, ஜூன் 5  புதுக்கோட்டையில் ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தை மாநில அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யதான் ஆகியோர் ஜூன் 3ஆம் தேதி தொடங்கி வைத்தனர். அதன்பிறகு, செய்தியாளர்களிடம் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கூறியதாவது, “தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக்கை ஒழிக்கும் நோக்கில்தான் 'மீண்டும் மஞ்சள் பை' திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளுக்குள் தமிழகம் முழுவதும் தூய்மையாக பசுமை நிறைந்த மாநிலமாக மாற்றப்படும். பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்த 172 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. ரூ.105 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 1,172 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார்.


No comments:

Post a Comment