இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! வெளியேறிய ரூ.14,000 கோடி வெளிநாட்டு நேரடி முதலீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 15, 2022

இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! வெளியேறிய ரூ.14,000 கோடி வெளிநாட்டு நேரடி முதலீடு

மும்பை, ஜூன் 15 - ஜூன் மாதத்தின் முதல் பத்து நாட்களில் இந்தியப் பங்குச் சந்தைகளிலிருந்து 

ரூ. 14 ஆயிரம் கோடி அளவிற்கான வெளிநாட்டு நேரடி முதலீ டுகள் வெளியேறியுள்ளது. இதன்மூலம் நடப் பாண்டின் 6 மாதங்களுக்கு உள்ளாக மட்டும்  வெளியேறிய ஒட்டுமொத்த அந்நிய நேரடி முதலீடு ரூ. 1 லட்சத்து 81 ஆயிரம் கோடியாக உயர்ந்து உள்ளது. 

பன்னாட்டு அளவில் ஏற்பட்டிருக்கும் பணவீக்கம், பொருளாதார மந்தநிலை, விநியோக நெருக்கடி ஆகிய காரணிகளால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குகளை விற்று வருவதாக கூறப்படுகிறது.  கடந்த 2021 அக்டோபர் மாதம் முதல் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குகளை விற்று வெளி யேறுவது தொடர்ச்சி யாக நிகழ்ந்து வருகிறது.  2022-ஆம் ஆண்டிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர், பண வீக்கம் போன்ற காரணிகளால் பன்னாட்டு அளவில் பங்குச் சந்தைகள் உறுதியற்ற  நிலையில் உள்ளன. இது இந்தியப் பங்குச் சந்தையிலும் சரிவை ஏற்படுத்தி வருகிறது.  பங்குச் சந்தைகள் நிலைத் தன்மை அடைய இன்னும் 3 மாதங்கள் ஆகும் என்றும் அதுவரையில் இந்தியாவில் அந்நிய முதலீடு வெளியேற்றம் தொடரும் என்றும் பங்குச் சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

தொழிலதிபருக்கு முகவர் வேலை பார்த்த மோடி  உண்மையைக் கூறிய இலங்கை

மின்வாரியத்தலைவர் பதவி விலகல்

கொழும்பு, ஜூன் 15 அதானி குழுமத்திற்காக பிரதமர் மோடி அழுத்தம் கொடுத்ததாக கூறி பரபரப்பை ஏற் படுத்திய இலங்கை மின்வாரிய தலைவர் எம்.எம்.சி. பெர்டி னாண்டோ  தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியா உதவிக்கரம் நீட்டி வருகிறது. அதன்ஒரு பகுதியாக,  இலங்கை மன்னாரில் 500 மெகா வாட் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை அதானிக் குழுமத்துக்கு நேரடியாக வழங்க வழி செய்ய பிரதமர் மோடி இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, இலங்கை நாடாளுமன்றத்தில்  சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.  இதற்கு இலங்கை மின் வாரிய பொறியாளர்கள் சங்கத் தினர் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, இலங்கை மின்சார வாரியத் தலைவர் எம்.எம்.சி.பெர்டினாண் டோவை, பொது நிறுவனங்களுக் கான நாடாளுமன்றக் குழு விசாரணைக்கு அழைத்தது. விசாரணையின் போது,   போது, “500 மெகாவாட் காற் றாலைத் திட்டத்தை அதானி குழுமத்துக்கு வழங்க வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனக்கு அழுத்தம் தந்ததாக இலங்கை அதிபர் கோத்பய ராஜபக்சே தன்னிடம் கூறியதாக தெரிவித்தார். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில்,  இலங்கை மின்வாரிய தலைவர் பதவியில் இருந்து எம்.எம்.சி. பெர்டினாண்டோ தனது பதவியில் இருந்து விலகி உள்ளார்.  இதையடுத்து, துணைத் தலைவர் நளிந்த இளங்கோகோன் என்பவர் சிலோன்(இலங்கை) மின்சார வாரியத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.



No comments:

Post a Comment