காவல்துறை உதவி ஆய்வாளருக்கான எழுத்து தேர்வு; 10,880 காவல்துறையினர் பங்கேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 27, 2022

காவல்துறை உதவி ஆய்வாளருக்கான எழுத்து தேர்வு; 10,880 காவல்துறையினர் பங்கேற்பு

 சென்னை, ஜூன் 27  காவல்துறை உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்து தேர்வில் 10 ஆயிரத்து 880 காவல்துறையினர் பங்கேற்றனர்.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வாயிலாக காவல் துறைக்கு புதிதாக 444 காவல்துறை உதவி ஆய்வாளர்க்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணிக்கு 2.22 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இவர்களில் பொதுப்பிரிவு விண்ணப்பத்தாரர்களுக்கு 25.6.2022 அன்று காலை பொது அறிவு; மாலையில் தமிழ் திறனறி எழுத்து தேர்வு 197 மய்யங்களில் நடந்தது. இதில் 1 லட்சத்து 73 ஆயிரத்து 487 பேர் பங்கேற்றனர்.

உதவி ஆய்வாளர் பணியில் சேர காவல் துறையில் பணிபுரியும் காவல்துறையினருக்கு 20 சதவீதம் ஒதுக்கீடு உள்ளது. அதன் அடிப்படையில் 13 ஆயிரத்து 374 பேர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கு சென்னை உட்பட 24 மய்யங்களில் காலை 10:00 மணியில் இருந்து மதியம் 1:00 மணி வரை எழுத்து தேர்வு நடந்தது. இதில் 10 ஆயிரத்து 880 காவல்துறையினர் பங்கேற்றனர்.


No comments:

Post a Comment