தருமபுரி மாவட்டக் கழகம் சார்பாக மாரண்டஅள்ளி பெரியார் பெருந்தொண்டர் மேனாள் மாவட்ட தலைவர் ஆசிரியர் மா.கிருஷ்ணன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி மற்றும் படத்திறப்புக்கு மாவட்ட தலைவர் மு. பரமசிவன் தலைமை தாங்கினார். மாநில அமைப்புச் செயலாளர் ஊமை. ஜெயராமன் படத்தை திறந்து வைத்து நினைவேந்தல் உரை யாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் மேனாள் மாவட்ட தலைவர் புலவர் .வேட்ராயன், பொதுக்குழு உறுப்பினர் அ.தீர்த்தகிரி, பொதுக்குழு உறுப்பினர் கா. கதிர். இளைய மாதன், மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் அண்ணா.சரவணன், பகுத்தறிவாளர் பண்ட அள்ளி.மு.மதிவாணன், ஓய்வு பெற்ற ஆசிரியர் நல்.கோபால் மாவட்ட இணை செயலாளர் பிரபாகரன், கிருஷ்ண கிரி மேனாள் மாவட்ட தலைவர் மதி மணியன், பகுத்தறிவாளர் வேணுகோபால், கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் அறிவரசன், மாவட்ட செயலாளர் மாணிக்கம் பொதுக்குழு உறுப்பினர் திராவிடமணி பரிமளம், நகர தலைவர் பாலன், ஆசிரியர் அணி பொறுப்பாளர் கதிர் செந்தில், கோவிந்தராசு, வண்டி ஆறுமுகம், முருகேசன், கணேசன், ஆறுமுகம், ஆசிரியர் சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர். அறிவுடைநம்பி. நன்றியுரை கூறினார்.

No comments:
Post a Comment