கோவை, மே 9- கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.5.59 கோடியில் 9 முடிவுற்ற பணிகள் திறப்பு விழா மற்றும் ரூ.49.62 கோடி மதிப்பீட்டில் 263 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடந்தது. இதனை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு மின்சார துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை வகித்தார்.
இதையடுத்து அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர் களிடம் கூறியதாவது: தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநக ராட்சிகளில் ரூ.24 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை, குடிநீர் வசதி, குப்பை கிடங்கு உள்ளிட்ட பல் வேறு பணிகள் நடந்து வருகிறது. கோவை மாநகராட்சி பகுதிகளில் பில்லூர் 3ஆவது குடிநீர் திட்டம் ரூ.750 கோடி மதிப்பீட்டில் நடைபெறுகிறது. அந்த பணி இன்னும் ஓராண்டில் நிறைவு பெற்றுவிடும். சிறுவாணியில் இருந்து 9 கோடி லிட்டர் தண்ணீர் தினமும் கோவை மாநகராட்சிக்கு கொடுக்க வேண்டும்.
ஆனால், அவர்கள் வெறுமனே 2 1/2 கோடி லிட்டர் மட்டுமே கொடுக்கிறார்கள். இப்பிரச்னைக்கு தீர்வு காண ஏற்கனவே தமிழ்நாடு முதலமைச்சர், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார். விரைவில் தமிழ்நாடு உயர் அதிகாரிகளை அங்கு அனுப்பி வைத்து குடிநீர் பிரச்னைக்குத் தீர்வு காணப்படும். கோவை, மதுரை, சென்னை ஆகிய இடங்களில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்க மும்பையில் உள்ளதுபோல் பிளான்ட் அமைத்து பணிகள் மேற்கொள்ளப்படும்.
செய்யாத பணியை செய்ததாக கூறி ரூ.10 லட்சம் மோசடியில் ஈடுபட்ட கோவை மாநகராட்சி அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ் வாறு கூறினார்.

No comments:
Post a Comment