ஹிந்து மதத்தின் ஒற்றுமை இதுதான்! வரதராஜப் பெருமாள் கோயிலில் தென்கலை, வடகலை பிரிவினர் குஸ்தி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 21, 2022

ஹிந்து மதத்தின் ஒற்றுமை இதுதான்! வரதராஜப் பெருமாள் கோயிலில் தென்கலை, வடகலை பிரிவினர் குஸ்தி

சென்னை, மே 21- காஞ்சிபுரம் வரத ராஜப் பெருமாள் கோயில் பிரம்மோற் சவ விழாவில் வேத பாராயணம் செய் வது தொடர் பாக தென்கலை மற்றும் வடகலை பிரிவினருக்கு இடையிலான பிரச்சினையில் தென்கலை பிரிவினர் மட்டும் வேத பாரா யணம் செய்யலாம் என்ற உதவி ஆணையர் உத்தரவையும், வடகலை பிரிவினரும் சேர்ந்து வேத பாராயணம் செய்யலாம் என்ற தனி நீதிபதி உத்தரவையும் நிறுத்தி வைத்து உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழாவில் தென் கலை பிரிவினர் மட்டும் பிரபந்தம் பாட அனுமதித்து கோயில் உதவி ஆணையர் கடந்த 14ஆம் தேதி உத்தரவு பிறப் பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து வடகலை பிரிவைச் சேர்ந்த நாராயணன் என்பவர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி, முதல் மூன்று வரிசை களில் தென்கலை பிரிவினரும், அவர்களுக்குப் பின்னர் வடகலைப் பிரிவினரும், சாதாரண பக் தர்களும் அமர வேண் டும் என்றும், முதலில் தென்கலை பிரிவினர் சிறீசைலேச தயாபாத்ரம் பாடவும், அதன்பிறகு வடகலை பிரிவினர் சிறீராமானுஜ தயாபாத்ரம் பாடவும், அதன் பின்னர் தென்கலை, வடகலை, பிற பக்தர்கள் இணைந்து நாலாயிர திவ்ய பிரபந்தம் பாட அனுமதிக்க வேண்டும் என்றும், நிறைவாக தென்கலை பிரிவினர் மண வாள மாமுனிகள் வாழித் திருநாமமும், வட கலை பிரிவினர் தேசிகன் வாழித் திருநாமமும் பாட அனு மதிக்கவேண்டும் எனவும் கடந்த 17ஆம் தேதி உத்தரவிட் டிருந்தார்.

இந்த உத்தரவுக்குத் தடை விதிக்க கோரி தென்கலை பிரிவைச் சேர்ந்த ரங்கநாதன் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், “கோயிலில் பிரபந்தம் பாட தென்கலைப் பிரிவினருக்கு மட்டுமே தனிப்பட்ட உரிமை உள்ளது. இந்த உரிமை கடந்த 1915 மற்றும் 1963ஆம் ஆண்டுகளில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே வடகலை பிரிவினருக்கு எந்த உரிமையும் இல்லை. ஆனால் வடகலை பிரிவினரையும் வேத பாராயணம் செய்ய தனி நீதிபதி அனுமதியளித்து இருப்பது மரபுகளுக்கும், உயர் நீதிமன்ற தீர்ப்புகளுக்கும் எதிரானது. எனவே தனி நீதிபதி கடந்த 17ஆம் தேதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்” என கோரியிருந்தார்.

No comments:

Post a Comment