லடாக் பாலம் கட்டும் சீனா இந்தியா என்ன செய்கிறது? ராகுல் கேள்வி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 21, 2022

லடாக் பாலம் கட்டும் சீனா இந்தியா என்ன செய்கிறது? ராகுல் கேள்வி

புதுடில்லி, மே 21 தேச பாதுகாப்பு மற்றும் ஒருமைப் பாட்டில் பேச்சு வார்த்தைக்கு இட மில்லை என்றும், பிரதமர் மோடி நாட்டை பாது காக்க வேண்டும் எனவும் மேனாள்  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். 

கடந்த 2020 ஆம் ஆண்டு சீன ராணுவம் கிழக்கு லடாக்கில் அத்துமீறியதை அடுத்து, அங்கு தனது ராணுவ கட்டமைப்பை வலிமைப்படுத்த பாங்காங் திசோ அருகே  பாலம் ஒன்றை ஏற்கெனவே கட்டியது. இந்நிலையில், பாங்காங் சோ ஏரியின் குறுக்கே, சீன ராணுவம் மேலும் ஒரு பெரிய பாலத்தை கட்டி வரும் செயற்கைக் கோள் ஒளிப்படம் வெளியாகியுள்ளது.

இது குறித்து, காங்கிரஸ் மேனாள் தலைவர்  ராகுல் காந்தி சுட்டுரையில் பதிவிடுகையில், சீனா பாங்காங் திசோ பகுதியில் முதல் பாலம் கட்டும்போது, ஒன்றிய அரசு நாங்கள் நிலைமையை கவனித்து வருகிறோம் என்றது. சீனா பாங்காங் திசோவில் இரண்டாவது பாலம் கட்டி யுள்ளது. இதற்கும் இந்திய அரசு, நாங்கள் நிலைமையை கவனித்து வருகிறோம் என்கிறது.  தேசிய பாதுகாப்பிலும்,  ஒருமைப்பாட்டிலும் பேச்சுவார்த்தை என்பதற்கு இடமே இல்லை. தைரியமில்லாத, பணிவான பதில் ஒன்றும் செய்ய போவதில்லை. பிரதமர் மோடி நாட்டை பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, இந்த விவகாரத்தில் பதிலளித்துள்ள வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, பாங்காங் திசோ ஏரிப் பகுதியில் சீனா கட்டும் 2 பாலங்களும், கடந்த 1960 ஆம் ஆண்டு முதல் சீன சட்டவிரோதமாக ஆக்கிரமித்த பகுதியில் உள்ளன. நமது இந்திய - மாநிலப் பகுதியின் சட்டவிரோத ஆக்கிரமிப் பையோ, சீனாவின் நியாயமில்லாத உரிமைகோரலையோ, இதுபோன்ற கட்டமைப்புகளையோ ஒன்றிய அரசு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது என்றார்.

No comments:

Post a Comment