சென்னை மண்டல இளைஞரணித் தோழர்களுடன் சந்திப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 9, 2022

சென்னை மண்டல இளைஞரணித் தோழர்களுடன் சந்திப்பு

தாம்பரம், மே 9- நேற்று (8.5.2022) ஞாயிற்றுக்கிழமை பிற் பகல் சென்னை மண்டலத் திற்கு உட்பட்ட தாம் பரம், சோழிங்கநல்லூர், தென் சென்னை ஆகிய மாவட்டங்களில் மண் டல இளைஞரணி செய லாளர் இர. சிவசாமி, மண்டல இளைஞரணி அமைப்பாளர் மு. சண் முகப்பிரியன் ஆகியோர்  ஏற்பாட்டில் இளைஞர் அணி தோழர்களை, மாநில இளைஞரணி துணை செயலாளர் சோ. சுரேஷ் நேரில் சென்று சந்தித்து, தெருமுனை கூட்டங்கள் நடத்துவது, சுவர் விளம் பரம் செய்வது, புதிய தோழர் களை கழகத்தில் இணைப்பது தொடர் பாக ஆலோசனை நடத்தி மாவட்ட இளைஞரணி தோழர்களின் கருத்துக் களை கேட்டறிந்தனர்.

தாம்பரம் மாவட்டத் தில், பகல் 12.30 மணிக்கு தாம்பரம் பேருந்து நிலை யத்தில் உள்ள பெரியார் புத்தக கண்காட்சி மற்றும் விற்பனை நிலையத்தில் திராவிடர் மாவட்ட தலைவர் ப. முத்தையன்,  தாம்பரம் நகர செயலா ளர் சு.மோகன்ராஜ், தே. ரூபன் ஆகியோரை சந் தித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சோழிங்க நல்லூர், காரப்பாக்கத்தில் உள்ள திராவிடர் கழக மாவட்டத் தலைவருக்கு சொந்தமான தங்கு விடுதி யில் மாவட்டத் தலைவர் ஆர்.டி வீரபத்திரனை சந் தித்து நலம் விசாரித்தோம்.

அம்மாவட்ட இளை ஞரணி தலைவர் ம.நித்தி யானந்தம் வருகை புரிந் திருந்த குணசேகரன், செம்மஞ்சேரி சந்தோஷ் , ஹிந்துஸ்தான் கல்லூரி மாணவர் சந்தோஷ், ஆகி யோருடன் அவரவர்தம் பகுதியில் தோழர்கள் தெருமுனை கூட்டங் களை எவ்வாறு நடத்த வேண்டும், பொதுமக்கள் ஆதரவினை பெறுவதற்கு செய்ய வேண்டிய வேலைத் திட்டங்கள், இளைஞர ணிக்கு புதிய தோழர்களை எவ்வாறு சேர்க்க வேண் டும் என்று கருத்துக்களை எடுத்துரைத்து  அவர்க ளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. 

அங்கிருந்து புறப் பட்டு மாலை 4 மணி யளவில் தென்சென்னை மாவட்டதிலுள்ள மயிலாப்பூர் நாகேஸ்வரா பூங்காவின் நுழைவாயில் அருகில் மாவட்ட இளை ஞர் அணி தலைவர் மகேந் திரன், மாவட்ட இளை ஞரணிச் செயலாளர்  ந.மணிதுரை,  மயிலாப்பூர் யுவராஜ் , ராஜா அண் ணாமலைபுரம் மாரி முத்து ஆகியோருடன் தெருமுனைப்பிரச்சாரம், ஹிந்தி எதிர்ப்பு மாநாட் டில் இளைஞரணியின ரின் பங்களிப்பு குறித்து உரையாடினார்கள். பங்கேற்ற தோழர்கள் அனைவரும் உற்சாகமாக பேசியதுடன், புது வேகத் துடன் செயல்படுவோம் என்று உறுதியளித்து மகிழ்ச்சியுடன் விடை பெற்றனர்.

No comments:

Post a Comment