நெய்வேலி நிலக்கரி நிறுவனப் பொறியாளர்கள் பணி நியமனங்கள் தமிழர்களுக்கு எதிராக திட்டமிட்ட சதி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 9, 2022

நெய்வேலி நிலக்கரி நிறுவனப் பொறியாளர்கள் பணி நியமனங்கள் தமிழர்களுக்கு எதிராக திட்டமிட்ட சதி!

பணி நியமன அறிக்கையைத் திரும்பப் பெறுக!

திராவிடர் கழக இளைஞரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

நெய்வேலி, மே 9- திராவிடர் கழக இளைஞரணி சார்பில், நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவன வேலை வாய்ப்புகளில் தமிழர்கள் புறக்கணிக்கப் படுவதைக் கண்டித்து நெய்வேலி நகரியம் தந்தை பெரியார் சிலை அருகில் இன்று (9.5.2022) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏராளமான பொதுமக் களும் திரண்டு வந்து ஆதரவு தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன் தலைமை வகித்தார். கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார்.

செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், கழகக் காப்பாளர் வெ.ஜெயராமன், தொழிலாளர் முன்னேற்ற சங்கத் தலைவர் திருமாவளவன், வெ.ஞானசேகரன் ஆகி யோர் கண்டன உரையாற்றினர்.

மாநில இளைஞரணி அமைப்பாளர் வழக்குரைஞர் ஆ.பிரபாகரன், மாநில இளைஞரணிச் துணைச் செயலாளர் தா.தம்பி பிரபாகரன், கடலூர் மண்டலத் தலைவர் அரங்க.பன்னீர்செல்வம், கடலூர் மாவட்டத் தலைவர் சொ.தண்டபாணி, விழுப்புரம்  மண்டலத் தலைவர் கோ.சா.பாஸ்கர், கடலூர்  மாவட்ட செய லாளர் தென்.சிவக்குமார், விருத்தாசலம் மாவட்டத் தலைவர் அ.இளங்கோவன், அரியலூர் மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகம், மாவட்டச் செயலாளர் சிந்தனைச்செல்வன், விழுப்புரம் மாவட்டச் செய லாளர் அரங்க.பரணிதரன், திண்டிவனம் மாவட்டச் செயலாளர் செ.பரந்தாமன், சிதம்பரம் மாவட்டத் தலைவர் பேரா.பூ.சி.இளங்கோவன் கல்லக்குறிச்சி மாவட்டத் தலைவர்  ம.சுப்பராயன், திண்டிவனம் மாவட்டத் தலைவர் இரா.அன்பழகன், விருத்தாசலம் மாவட்டச் செயலாளர் ப.வெற்றிச்செல்வன், சிதம்பரம் மாவட்டச் செயலாளர் அன்பு.சித்தார்த்தன், கல்லக் குறிச்சி மாவட்டச் செயலாளர் ச.சுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.

கடலூர் மண்டல இளைஞரணி செயலாளர்நா.பஞ்சமூர்த்தி, கடலூர் மண்டல மாணவர் கழக செயலாளர் ப.பண்பாளன், விழுப்புரம் மண்டல இளைஞரணி செயலாளர் த.பகவன்தாஸ், புதுச்சேரி மண்டல இளைஞரணி தலைவர் தி.இராஜா,  அரியலூர் மண்டல இளைஞரணி செயலாளர் பொன்.செந்தில்குமார், கடலூர் மாவட்ட இளைஞரணி தலைவர் நா.உதய சங்கர், கடலூர் மாவட்ட இளைஞரணிச் செயலாளர் கோ.வேலு, கடலூர் மாவட்ட இளைஞரணி அமைப் பாளர் இரா.ராமநாதன், விருத்தாசலம் மாவட்ட இளை ஞரணி தலைவர் செ.சிலம்பரசன், பெரம்பலூர் மாவட்ட இளைஞரணி தலைவர் செ.தமிழரசன், கடலூர் மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் சு.ரகுராமன், விழுப்புரம் மாவட்ட இளைஞரணி தலை வர் அ.சதீஷ், திண்டிவனம் மாவட்ட இளைஞரணி தலைவர் ரமேஷ், சிதம்பரம் மாவட்ட இளைஞரணி தலைவர் அ.சுரேஷ், விழுப்புரம் மாவட்ட இளை ஞரணி செயலாளர் க. பகலவன் குணா.விக்னேஷ், கல்லக்குறிச்சி மாவட்ட இளைஞரணி செயலாளர் சே.சரவணன், திண்டிவனம் மாவட்ட இளைஞரணி செயலாளர் பொ.தேவராஜ், சிதம்பரம் மாவட்ட இளை ஞரணி செயலாளர் சிற்பி. சிலம்பரசன், விருத்தாசலம் மாவட்ட இளைஞரணி செயலாளர் சே.பெரியார்மணி, அரியலூர் மாவட்ட இளைஞரணி செயலாளர் க.கார்த்திகேயன், கல்லக்குறிச்சி மாவட்ட இளைஞரணி தலைவர் க.கரிகாலன்,  பெரம்பலூர் மாவட்ட இளை ஞரணி செயலாளர் மு.ராஜா, நெய்வேலி நகர இளை ஞரணி செயலாளர் பா.மாணிக்கவேல், நெய்வேலி நகர தலைவர் சா.சு.இசக்தி முத்து, நெய்வேலி நகரச் செயலாளர் கு.ரத்தினசபாபதி உள்பட 200க்கும் மேல்பட்டோர் கலந்து கொண்டனர்.

நிறைவாக நெய்வேலி நகர இளைஞரணி தலைவர்

யோ.இராஜாசிதம்பரம் நன்றி கூறினார்.


No comments:

Post a Comment