பெங்களூரு,மே 20- மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு அமைந்த நாளிலிருந்து நாடுமுழுவதும் வகுப்புவாத வன்முறைகள், மதவெறியாட்டங்கள், ஹிந்துத்துவாவைத் திணிக்கின்ற போக்குகள் தொடர்ந்துகொண்டிருக் கின்றன.
பசுவதை தடுப்பு என்கிற பெயரால் மதச்சிறுபான்மையர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள்மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. ஆர்.எஸ்.எஸ். சங் பரிவார அமைப்புகள் ஆங்காங்கே தலை கொழுத்து மதவெறியாட்டங்களைப் போட்டு வருகின்றன. இவை அத் தனைக்கும் பாஜக அரசின் உறுதுணையே காரணமாக அமைந்ததுடன், அந்த அதிகார ஆணவப்போக்குடன் வகுப்பு வாத வன்முறைகள் பெருகிய வண்ணம் உள்ளன.
மாட்டிறைச்சி, கர்வாப்சி, லவ்ஜிகாத் உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் நாட்டில் வகுப்புவாத வன்முறைகள் தூபம்போட்டு வளர்க்கப்பட்டன.
ஒடிசாவில் தொழுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் கிறித்தவ பாதிரியாரை அவர் குடும்பத்தினருடன் பஜ்ரங் தள், சங்பரிவார அமைப்பனர் ஜீப்பில் வைத்து தீயிட்டு எரித்தனர் என்பதை யாரும் மறந்திருக்க முடியாது.
திட்டமிட்டு வன்முறைகள்
அண்மையில் வட மாநிலங்களில் மதச்சிறுபான்மை மக்களான இசுலா மியர்கள்மீது திட்டமிட்டு வன்முறைகள் ஏவப்பட்டு வருகின்ற நிலையில், பாஜக ஆளும் கருநாடக மாநிலத்தில் சங் பரிவார அமைப்புகளில் ஒன்றான பஜ்ரங் தள் அமைப்பின் சார்பில் துப்பாக்கிப்பயிற்சி அளிக்கப்படுகின்ற தகவல் வெளி யாகியுள்ளது.
கருநாடக மாநிலம் குடகு மாவட்டம் பொன்னாம்பேட்டையில் உள்ள சாய் சங்கர் கல்வி நிறுவனத்தில் பஜ்ரங் தளம் அமைப்பினர் ஆயுதப் பயிற்சி முகாம் நடத்திய புகைப்படங்கள் அண்மையில் சமூக வலைதளங்களில் வைரலாகின. இதையடுத்து எஸ்டிபிஅய், பாபுலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா ஆகிய கட்சியினர் பஜ்ரங் தளம் அமைப்பினருக்கு எதிராக மடிகேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
ஆயுதப் பயிற்சி
அதில், “பஜ்ரங் தளம் அமைப்பின் சார்பில் அமைப்புகளின் தொண்டர்கள் 116 பேருக்கு கடந்த 5ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை பொன்னாம் பேட் டையில் உள்ள சாய் சங்கர் கல்வி நிறுவனத்தில் ஆயுதப் பயிற்சி அளிக்கப் பட்டுள்ளது. இதில் துப்பாக்கி சுடுதல், வாள் வீச்சு உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
இதற்கு குடகு மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கே.ஜி. போபையா, அப்பா சுரஞ்சன் உள் ளிட்டோர் ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த பயிற்சியினால் சமூக அமைதி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது ஆயுத தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரப்பட் டுள்ளது.
கருநாடக மேனாள் முதலமைச்சர் சித்தராமையா பஜ்ரங் தளத்தின் ஆயுதப்பயிற்சிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, “இந்த ஆயுதப் பயிற்சிக்கு என்ன அவசியம் இருக்கிறது? மதக் கலவரத்தை தூண்டு வதற்காக இந்தப் பயிற்சி அளிக்கப் படுகிறதா? உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
கத்தி, துப்பாக்கியுடன் திரிசூல தீட்சையாம்
இதற்கு குடகு மாவட்ட பஜ்ரங் தளம் தலைவர் ரகு சக்லேஷ்பூர் கூறும்போது, “தற்காப்புக் கலை தொடர்பாக இளை ஞர்களுக்கு ஒரு வார கால பயிற்சி அளித் தோம்.
அதில் யோகா பயிற்சி, உடற்பயிற்சி, மனவள பயிற்சி ஆகியவற்றை போன்று வேறு சில பயிற்சிகளும் வழங்கினோம். நீளம் தாண்டுதல், கயிறு ஏறுதல், பளு தூக்குதல் உள்ளிட்ட போட்டிகளையும் நடத்தினோம். தற்காப்புக் கலையின் அங்கமான ‘திரிசூல தீட்சை’க்காக கத்தி, துப்பாக்கியை வைத்து பயிற்சி வழங்கப்பட்டது. இது ஆயுத தடுப்பு சட்டத்துக்கு எதிரானது அல்ல” என்றார்.
இந்நிலையில், மடிகேரி காவல்துறையினர் வீராஜ்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் கேஜி போபையா, மடிகேரி சட்டமன்ற உறுப்பினர் அப்பா சுரஞ்சன், எம்.எல்.சி. சுஜா குஷாலப்பா, பஜ்ரங் தளம் அமைப்பின் மாவட்ட தலைவர் ரகு சக்லேஷ்பூர், விஹெச்பி அமைப்பின் மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பாஜக ஆளும் கருநாடக மாநிலத்தில் சங் பரிவாரங்களின் சட்ட விரோத ஆயுதப்பயிற்சிக்கு தடை போடாதது ஏன் என்கிற கேள்வி எழுகிறது.

No comments:
Post a Comment