செவ்வாய்க்கோளில் காணப்படும் கதவு போன்ற இயற்கை அமைப்பை வேற்றுக்கோள் மனிதர்கள் வீடு என்று கதைவிட்ட இணைய மேதாவிகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 21, 2022

செவ்வாய்க்கோளில் காணப்படும் கதவு போன்ற இயற்கை அமைப்பை வேற்றுக்கோள் மனிதர்கள் வீடு என்று கதைவிட்ட இணைய மேதாவிகள்

செவ்வாய்க்கோளில் காணப்படும் கதவு போன்ற இயற்கை அமைப்பை வேற்றுக்கோள் மனிதர்கள் வீடு என்று இணைய மேதாவிகள் கதைவிட்டுள்ளனர்.

செவ்வாய்க் கோளில் கதவு ஒன்று இருப்பதைப் போன்று காட்டும் படங்கள் அண்மையில் இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டுவருகின்றன.

அமெரிக்காவின் நாசா ஆய்வகத் துடைய க்ரியோசிட்டி விண்கலம் செவ் வாய்க் கோளில் எடுத்த சில படங்கள் வெளியிடப்பட்டன.

இப்படங்களில் மே  7-ஆம் தேதி எடுக்கப்பட்ட படத்தில் கவுண்ட் சார்ப் எனும் மலையிலுள்ள குன்று இடம் பெறுகிறது.

குன்றில் ஒரு பெரும் துளை தென்படு கிறது. 30 சென்டிமீட்டர் உயரத்திலும் 40 சென்ட்டிமீட்டர் அகலத்திலும் இருக்கும் அந்தத் துளை ஒரு கதவைப் போன்று தோன்றுகிறது. 

அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த இணையவாசிகள் பலர் படம் போலி யானதா என்றுகூட கேள்வி எழுப்பினர்!

இருப்பினும், படம் உண்மைதான் என்று ழிகிஷிகி ஆய்வகம் கூறியுள்ளது. "துளை இருந்தது உண்மை. ஆனால் அது இயற்கை ஆனது, செவ்வாய்க் கோள் உயிரோடு இந்த காலகட்டத்தில் பல எரிமலைக்குழம்புகள் வெளியேறும் லாவா டியூப் வாயிலாக இருக்கலாம், 

இவ்வாறு லாவாகுழம்பு வெளியேறிய பகுதிகள் கதவுகள் போலவும், வீட்டு வாசல் படிகள் போன்ற அமைப்போடு பூமியில் கூட காணப்படுகிறது. ஆகவே செவ்வாய்க் கோளில் காணப்பட்ட இந்த காட்சி இயற்கையாகவே உருவானது. 

செயற்கை வீடு, கதவு, வேற்றுக்கோள் வாசிகள் என்று இணையதள அறிவாளி கள் பரப்பும் போலித்தகவல்களை நம்ப வேண்டாம்" என்று கூறியுள்ளது

அது போன்ற துளைகள் செவ்வாய்க் கோள், பூமி ஆகியவற்றின் மேற்பரப்பில் காணப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment