சென்னை மாநகராட்சி பெண் கவுன்சிலர்களின் உறவினர்களுக்கு தடை கே.பாலகிருஷ்ணன் வரவேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 16, 2022

சென்னை மாநகராட்சி பெண் கவுன்சிலர்களின் உறவினர்களுக்கு தடை கே.பாலகிருஷ்ணன் வரவேற்பு

சென்னை, மே 16- சென்னை மாநகராட்சி பெண் கவுன்சிலர் களின் உறவினர்கள், நிலைக் குழுக் கூட்டங்களுக்கோ, மண்ட லக் கூட்டங்களுக்கோ வருகை தரக் கூடாது என்று நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறைகளின் செயலர்களுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதற்கு இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வரவேற்றுள்ளார்.

அனைத்து மன்றங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் கவுன்சிலர்கள் சுயமாக இயங்குவதற்கான சூழலை ஏற்படுத்துவதும், அவர்களது பணிகளை கணவர் உள்ளிட்ட குடும்பத்தினர் செய்வதைத் தடுப்பதும் மிகவும் முக்கியமானது.

பெயருக்கு அவர்களை தேர்ந்தெடுத்துவிட்டு, அவர் களது பணிகளை எல்லாம் பினாமியாக தந்தையோ, கண வரோ அல்லது மற்றவர்களோ மேற்கொள்ளும் நிலையை ஒருபோதும் ஏற்கக்கூடாது.

தாழ்த்தப்பட்ட, பழங்குடியின கவுன்சிலர்கள் வேறு விதமான பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். பல் வேறு இடங்களில் இடஒதுக்கீட்டின் காரணமாக தாழ்த்தப் பட்ட, பழங்குடியின வேட்பாளர்களை, ஜாதி ஆதிக்க, பொருளாதார ஆதிக்க சக்திகள் நிறுத்தி வெற்றிபெறச் செய்து, அவர்கள் பினாமியாக செயல்படுகின்றனர்.

எனவே, தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள், தலை வர்கள் தவிர வேறு யாரும் கூட்டங்களுக்கு வருவதற்கும், அவர்களது பணிகளை செய்வதற்கும் அனுமதி இல்லை என்பதை தெளிவாக உணர்த்த வேண்டும்.

இதை மீறி மக்கள் பிரதிநிதிகள் அல்லாதவர்களை செயல்பட அனுமதிக்கும் அதிகாரிகளையும் ஒழுங்கு படுத்த வேண்டும்.

இது தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராமப்புற, நகர்ப்புற உள்ளாட்சி மன்றங்களுக்கு உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்.

- இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


No comments:

Post a Comment