ஹிந்துக்களை சிறுபான்மையராக அறிவிக்கக்கோரிய வழக்கில் முடிவெடுக்கும் அதிகாரம் யாருக்கு - மாநிலங்களுக்கா? ஒன்றிய அரசுக்கா? குழப்பிய ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 12, 2022

ஹிந்துக்களை சிறுபான்மையராக அறிவிக்கக்கோரிய வழக்கில் முடிவெடுக்கும் அதிகாரம் யாருக்கு - மாநிலங்களுக்கா? ஒன்றிய அரசுக்கா? குழப்பிய ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

புதுடில்லி, மே 12- நாட்டில் பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஹிந்துக்கள் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதாக வும், எனவே அந்த மாநிலங்களில் அவர்களை சிறுபான்மையினராக வகைப்படுத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் பொது  நலன் மனு ஒன்று தாக்கல் செய் யப்பட்டிருந்தது. 

இந்த மனு மீது ஏற்கெனவே பிர மாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்த ஒன்றிய அரசு, சிறுபான்மையினர் 

தகுதி கொடுக்கும் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மாநில அரசுதான் முடி வெடுக்க வேண்டும் என கூறியிருந்தது. இதற்கிடையில் புதிய பிரமாணப் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்த ஒன் றிய அரசு, இவ்விவகாரத்தில் முடிவெ டுக்க வேண்டிய அதிகாரம் ஒன்றிய அரசிடம்தான் இருக்கிறது என  முந் தைய கருத்திலிருந்து அப்படியே பல்டி அடித்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷண் கவுல் தலைமையிலான அமர்வின்முன்பு 10.5.2022 அன்று விசாரணைக்கு வந்தபோது, ஒன்றிய அரசின் இந்த மாற்று நிலைப் பாட்டை நீதிபதிகள் கடுமையாக விமர் சித்தனர்.

“நீதிமன்றத்தில் ஒரு விஷயத்தை தாக்கல் செய்வதற்கு முன்பாக பல ஆலோசனைகளை முன்வையுங்கள் ஏனென்றால் அனைத்தும் பொது வெளிக்கு வந்துவிடும். இது தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்தும். இதுபோன்ற விஷயங்களில் அதிக கவனத்துடன் இருங்கள்” என ஒன்றிய அரசின் வழக்குரைஞரிடம் நீதிபதிகள் எச்சரித்தனர். மேலும், “நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். எல்லா வற்றையும் நீதிமன்றம் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. பிற சமூகத்தை விட எண்ணிக்கையில் குறைவாக உள்ள ஹிந்துக்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்குவது தொடர்பாக மாநிலங்களுடன் கலந்தாலோசிக்க விரும்பினால், அவ்வாறு செய்ய வேண் டியதுதானே...” எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். 

பின்னர், 10 மாநிலங்களில் ஹிந் துக்களுக்கு சிறுபான்மையினர் தகுதி வழங்கும் விவகாரம் தொடர்பாக பல்வேறு மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தி ஒரு முடிவுக்கு வர ஒன்றிய அரசுக்கு மூன்று மாதம் கால அவகாசம் வழங்கிய நீதிபதிகள் மேலும் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment