உடலுக்கு உகந்த பழங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 23, 2022

உடலுக்கு உகந்த பழங்கள்

பப்பாளி: பலமான விருந்துகளுக்குப் பிறகு பப்பாளிப்பழத் துண்டுகள் அய்ந்தாறு சாப்பிட்டால் போதும். உடனே சாப்பிட்டவை அனைத்தும் ஜீரணமாகிவிடும். 

வயிற்றில் புழு, பூச்சிகளால் அவதிப்படுபவர்களுக்கும், ஜீரண சக்தி கேளாறு உள்ளவர்களுக்கும் பப்பாளியில் உள்ள "பாப்பைன்' என்னும் செரிமானப் பொருள் சர்வசக்தி வாய்ந்த மருந்தாகப் பயன்படுகிறது. வாரம் ஒருமுறை பப்பாளிப்பழம் சாப்பிடுவது கண்களுக்கு மிகவும் நல்லது.

 மூலநோய், சர்க்கரைநோய், குடல் அலற்சி, போன்றவற்றுக்கு சிறந்தது. வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. பல் சம்பந்தமான குறைப்பாட்டிற்கும் சிறுநீர்பையில் ஏற்படும் கல்லை கரைக்கவும் பப்பாளி பயன்படும். நரம்புகள் பலப்படும். ஆண்களின் உடற் தன்மையை பலப்படுத்தும்.

கொய்யா: வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. சொறி, சிரங்கு, ரத்தசோகை, இருப்பவர்கள் கொய்யாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு பயன்பெறலாம். 

நஞ்சுக் கிருமிகளை கொல்லும் சக்தி கொய்யாப்பழத்துக்கு இருப்பதால் வியாதியை உண்டு பண்ணும் நஞ்சுக் கிருமிகள் ரத்தத்தில் கலந்துவிட்டால் அதை உடனே கொன்றுவிடும் சக்தி படைத்தது.

மாதுளை:  மலத்தை இளக்கும் சக்தி பெற்றது. இருமல், பித்தம், சம்பந்தமான அனைத்து குறைபாடுகளுக்கும் நல்ல பலன் தரக்கூடியது. வறட்டு இருமலை குணப்படுத்தும்.

No comments:

Post a Comment