உக்ரைனின் இயற்கை வளம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 28, 2022

உக்ரைனின் இயற்கை வளம்

* பரப்பளவில் அய்ரோப்பாவின் இரண்டாவது பெரிய நாடு, பறத்தாழ நான்கு கோடி மக்கள்தொகை கொண்டது.

* யூரேனியம் தாது சேமிப்பில் அய்ரோப்பாவில் முதல் இடம்.

* டைட்டானியம் சேமிப்பில் உலகின் பத்தாவது இடம் மற்றும் அய்ரோப்பாவில் இரண்டாவது இடம்.

* மங்கனீஸ் தாது சேமிப்பில் உலகில் இரண்டாவது இடம், (2.3 பில்லியன் டன் (உலக சேமிப்பில் 12 சதவிகிதம்)

* இரும்பு தாது சேமிப்பில் உலகில் இரண்டாவது இடம். (30 பில்லியன் டன்)

* மெர்குரி தாது சேமிப்பில் அய்ரோப்பாவில் இரண்டாவது இடம்

* இயற்கை வாயு சேமிப்பில் அய்ரோப்பாவில் மூன்றாவது இடம், (உலகில் 13ஆவது இடம். (22 ட்ரில்லியன் கியூபிக் மீட்டர்)

* உலகத்தின் இயற்கை வளங்களின் மதிப்பில் நான்காம் இடம்

* நிலக்கரி சேமிப்பில் உலகத்தில் ஏழாம் இடம் (33.9 பில்லியன் டன்)

* உக்ரைன் மிக முக்கியமான விவசாயம் சார்ந்த நாடு.

*  விவசாயத்திற்கு பயன்படக்கூடிய நிலத்தில் அய்ரோப்பாவில் முதல் இடம்.

* அய்ரோப்பாவில் கரிசல் மண் பகுதியில் மூன்றாம் இடம். (உலகின் கரிசல் மண் பகுதியில் 25 சதவிகிதம்.)

* சூரியகாந்தி விதை மற்றும் எண்ணெய் ஏற்றுமதியில் உலகின் முதலில் இடம்.

* பார்லி உற்பத்தியில் உலகின் இரண்டாம் இடம் மற்றும் ஏற்றுமதியில் நான்காம் இடம்.

* மக்காச்சோளம் உற்பத்தியில் மூன்றாம் இடம் மற்றும் ஏற்றுமதியில் நான்காம் இடம்,

* உலகின் உருளைக்கிழங்கு உற்பத்தியில் நான்காம் இடம்,

* கம்பு உற்பத்தியில் உலகின் அய்ந்தாம் இடம்

* தேனீ உற்பத்தியில் உலகின் அய்ந்தாம் இடம். (75000 டன்)

* கோதுமை ஏற்றுமதியில் உலகின் எட்டாவது இடம்

*  கோழி முட்டை உற்பத்தியில் உலகின் ஒன்பதாம் இடம்.

* பாலாடைக்கட்டி ஏற்றுமதியில் உலகின் 16ஆம் இடம்

* உக்ரைன் அறுபதுகோடி மக்களின் உணவு தேவையை சந்திக்க முடியும்.

* உக்ரைன் ஒரு சிறந்த தொழிற்சாலைகள் நிறைந்த நாடு.

* அம்மோனியா உற்பத்தியில் அய்ரோப்பாவில் முதல் நாடு

* இயற்கை வாயு குழாய் அமைப்பில் அய்ரோப்பாவில் இரண்டாம் இடம் மற்றும் உலகில் 4ஆவது இடம்.

* அணு உலைகள் அமைப்பில் அய்ரோப்பாவில் மூன்றாம் இடம் மற்றும் உலகில் 8ஆவது இடம்.

* ரயில் பயண இணைப்பில் அய்ரோப்பாவில் மூன்றாம் இடம் மற்றும் உலகில் 11வது இடம். (21700 கிலோ மீட்டர்),

* கண்டுபிடிப்பு கருவிகள் உற்பத்தியில் அமெரிக்கா மற்றும் பிரான்சிற்கு அடுத்த மூன்றாம் இடம்.

* இரும்பு ஏற்றுமதியில் உலகின் மூன்றாம் இடம்.

* அணுஉலை உற்பத்திக்கான டர்பைன் ஏற்றுமதியில் உலகின் நான்காம் இடம்.

* ராக்கெட் ஏவுதளங்கள் அமைப்பில் உலகின் நான்காம் இடம்.

*  உலகின் களிமண் ஏற்றுமதியில் நான்காம் இடம்.

* டைட்டானியம் ஏற்றுமதியில் உலகின் நான்காம் இடம்.

 

No comments:

Post a Comment