தினசரி கரோனா பாதிப்பு குறைகிறது: ஒரு நாளில் 2,202 பேருக்கு தொற்று - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 16, 2022

தினசரி கரோனா பாதிப்பு குறைகிறது: ஒரு நாளில் 2,202 பேருக்கு தொற்று

புதுடில்லி, மே 16- நாட்டில் தற் போது கரோனா பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது. ஆனாலும் கடந்த சில தினங்களாக சின்னச்சின் னதாய் ஒரு ஏற்றம் இருந் தது. அந்த நிலை இன்று  மாறி இருக்கிறது.

நேற்று முன் தினம் 2,858 நேற்று 2,487 ஆக இருந்த கரோனா பாதிப்பு 14.5.2022 அன்று 2,202 ஆக குறைந்தது. இந்தியா வில் கரோனா பாதிப்பு 4,31,21,599லிருந்து 4,31,23,801 ஆக உயர்ந்தது. இந்தியாவில் ஒரே நாளில் 2,550 பேர் கரோனா பாதிப்பி லிருந்து குணம டைந்த னர். இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,25,79,693 லிருந்து 4,25,82,243 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கரோ னாவுக்கு ஒரே நாளில் 27 பேர் உயிரிழந்தனர். இது வரை 5,24,241 பேர் உயிரி ழந்துள்ளனர்.  நாடு முழு வதும் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 17,692 லிருந்து 17,317 ஆனது.

இந்தியாவில் ஒரே நாளில் 3,10,218  பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 191.37 கோடி பேருக்கு டோஸ் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இவ்வாறு ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

No comments:

Post a Comment