தேசத் துரோக சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் சரத் பவார் வலியுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 30, 2022

தேசத் துரோக சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் சரத் பவார் வலியுறுத்தல்

மும்பை, ஏப். 30- கிழக்கிந்திய கம்பெனி, மராட்டியர்க ளுக்கு இடையே நடந்த போரின் 200ஆவது ஆண்டு நினைவு நிகழ்ச்சி 2018 ஜனவரி 1ஆம் தேதி மகாராட்டிராவின் பீமா கோரேகானில் நடை பெற்றது. அப்போது இரு தரப்பினருக்கு இடையே வன்முறை வெடித்தது. இதில் 2 பேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து கொல் கத்தா உயர் நீதிமன்ற மேனாள் தலைமை நீதி பதி ஜே.என்.படேல் தலை மையில் நீதித்துறை ஆணை யம் விசாரித்து வருகிறது. இதனிடையே வன்முறை யில் இந்துத்துவா அமைப் புகளுக்கு தொடர்பிருப்ப தாக தேசியவாத காங்கி ரஸ் தலைவர் சரத் பவார் குற்றம் சாட்டினார். இது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு சரத் பவாரிடம் ஆணையம் கேட்டுக் கொண்டது. இதன் படி கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் தேதி சரத் பவார் சார்பில் ஆணையத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய் யப்பட்டது.

கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி ஆணையத்தில் கூடு தலாக ஒரு பிரமாண பத்திரத்தை சரத் பவார் சமர்ப்பித்தார். அதில், “தேசத் துரோக சட்டம் தவறுதலாக பயன் படுத் தப்படுகிறது. ஆங்கிலே யர் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். நாட் டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டமே (உபா) போது மானது” என்று தெரிவித்துள்ளார். 2 பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தும் சரத் பவாரிடம் நேரடி யாக வாக்குமூலம் பெற ஆணையம் முடிவு செய்து உள்ளது.

No comments:

Post a Comment