நிலக்கரி கொண்டு செல்லும் ரயில்களை இயக்க 657 பயணிகள் ரயில் சேவைகள் ரத்து: ஒன்றிய அரசு முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 30, 2022

நிலக்கரி கொண்டு செல்லும் ரயில்களை இயக்க 657 பயணிகள் ரயில் சேவைகள் ரத்து: ஒன்றிய அரசு முடிவு

புதுடில்லி, ஏப். 30- நாடு முழுவதும் 657 பயணிகள் ரயில் சேவைகளை தற் காலிகமாக நிறுத்த ஒன் றிய அரசு முடிவு செய்துள் ளதாக தகவல் வெளியாகி யுள்ளது. 

நாடு முழுவதும் நிலக் கரி தட்டுப்பாடு காரண மாக பல மாநிலங்கள் நீண்ட நேர மின்வெட்டு பிரச்சினையை சந்தித்து வருகிறது. இதனால் மக் கள் மிகவும் அவதிய டைந்து வருகின்றனர். மேலும் மின் வெட்டு பிரச்சினையை சரிசெய்ய ஒன்றிய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், பய ணிகள் ரயில் சேவையை ரத்து செய்து, நிலக்கரி கொண்டு செல்லும் ரயில் களை வேகமாக இயக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. அதன்படி நாடு முழுவதும் 657 பய ணிகள் ரயில் சேவைகளை தற்காலிகமாக நிறுத்த ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக இந்திய ரயில்வே செயல் இயக்குநர் கூறுகையில், "தற்போதைய அவரச காலச் சூழலில் எடுத் துள்ள தற்காலிக முடிவு இது. மின் நிலையங்க ளுக்கு வேகமாக நிலக்க ரியை கொண்டு சேர்க் கவே இந்த முடிவு எடுக் கப்பட்டுள்ளது. நிலைமை சீரானதும் சேவைகள் வழக்கம்போல இயங்கும்.

நிலக்கரி தட்டுப்பாட் டால் பல மாநிலங்களில் மின் தட்டுப்பாடு ஏற்பட் டுள்ள நிலையில் 533 சரக்கு பெட்டிகளில் நிலக்கரி கொண்டு செல்ல ஒன்றிய அரசு ஏற்பாடு செய்துள்ளது. மின் துறைக்கு வழங்க ரயில் களில் 1.62 மில்லியன் டன் நிலக்கரி கொண்டு செல் லப்படுகிறது. 

இவ்வாறு அவர் கூறினார். 

No comments:

Post a Comment