டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:
நான்கு மாநிலங்களில் இடைத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், இதில் ஒன்றில் கூட பாஜக வெற்றியை பதிக்க முடியவில்லை. மோடி - அமித் ஷா பிரச்சாரம் செல்லாமல் இருந்தால் எதிர்க்கட்சிகள் வெற்றி பெறும் நிலை உள்ளதா? என தலையங்கத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது நடைபெறும் அசாதாரண சம்பவங்கள் பற்றி ஆலோசிக்க எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல் அமைச்சர்களின் மாநாட்டை மும்பையில் நடத்த ஆலோசிக்கப்படுவதாக சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவுத் தெரிவித்தார்.
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
கல்வி, ஒத்திசைவுப் பட்டியிலில் இருந்தும், மாநிலங் களைக் கலந்து ஆலோசிக்காமல் ஒன்றிய அரசு கல்வி குறித்த முக்கிய முடிவுகளை எடுக்கிறது என தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி கண்டனம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
நாட்டில் 1.5 கோடி பணியிடங்கள் காலியாக இருந் தாலும், வேலையில்லாத இளைஞர்கள் வெறும் வயிற் றோடு அலைகின்றனர் என்று பாஜக நாடாளுமன்ற உறுப் பினர் வருண் காந்தி தெரிவித்துள்ளார்.
இந்தி இந்தியாவை ஒருபோதும் இணைக்காது. ஒரு புரட்சி போல தோற்றமளிக்கும் வகையில், உ.பி. அர சாங்கம் சமீபத்தில் 15,000 ஆரம்ப மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை ஆங்கில வழிக் கல்வியாக மாற்றியது என மூத்த பத்திரிகையாளர் டி.ஜே.எஸ்.ஜார்ஜ் குறிப்பிட்டு உள்ளார்.
போபாலில் ஆர்.எஸ்.எஸ். சார்ந்த சிந்தனைக் குழுவான பிரஜ்னா பிரவாவின் அகில பாரதிய சிந்தனை பைதக் (அகில இந்திய சிந்தனைக் கூட்டம்) நிறைவுக் கூட்டத்தில் பல்வேறு பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மற்றும் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர்கள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் உட்பட பல கல்வியா ளர்கள் மற்றும் அறிவுஜீவிகள் பங்கேற்றனர். அதில் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், சங்கம் யாருக்கும் போட்டியல்ல, ஆனால் மதம் மற்றும் தேசத்தின் நலனுக்காக பாடுபடும் பல்வேறு அமைப்புகள், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் கூட்டாளியாகும் என்றார்.
தி டெலிகிராப்:
சிவில் சமூகம் மற்றும் ஊடகப் பிரிவுகள் பேச விரும் பும் பிரச்சினைகளுக்கு செவிசாய்ப்பதன் மூலம் தேர் தல்கள் வெற்றி பெறாது என்பதை சமீபத்திய கருத்துக் கணிப்புகள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன என பத்திரி கையாளர் செவந்தி நினன் குறிப்பிட்டுள்ளார்.
யஷ்வந்த் சின்ஹா தலைமையிலான அக்கறையுள்ள குடிமக்கள் குழுவின் அறிக்கை, சிறுபான்மையினர் மீதான சமீபத்திய தீவிரவாதத் தாக்குதல்களை, பிரதமர் நரேந்திர மோடியால் விளம்பரப்படுத்தப்பட்ட தி காஷ்மீர் ஃபைல்ஸ் என்ற திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி யுள்ளது.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment