வகுப்புவாத கலவரத்தில் தீவிரம் காட்டும் பஜ்ரங் தளம் வேடிக்கை பார்க்கும் பா.ஜ.க. அரசு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 9, 2022

வகுப்புவாத கலவரத்தில் தீவிரம் காட்டும் பஜ்ரங் தளம் வேடிக்கை பார்க்கும் பா.ஜ.க. அரசு

பெங்களூரு, ஏப்.9- பாஜக ஆளும் கருநாடக மாநிலத்தில் மதச் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு கேள்விக்குள் ளாக்கப்பட்டு வருகிறது. இசுலாமிய மத வெறுப்புணர்ச்சியைத் தூண்டிவிட்டு இந்துத்துவா அமைப்புகள் வகுப்புவாத கலவரத்தை முன்னெடுக்கத் தொடங்கி யுள்ளன. மாநிலத்திலும், ஒன்றியத்திலும் ஆளும் பாஜக மதவெறியுடன் வன்முறை கலவரக்காரர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது.

பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே இசுலாமியப் பெண்கள் அணியும் ஹிஜாப் பிரச்சினையைத் தூண்டி விடுவது, இசுலாமியர்களின் இறைச்சிக் கடைகள், உணவகங்களில் பின்பற்றப்படு கின்ற ஹலால் முறையை தடை செய்வது என்கிற  வரிசையில், மசூதியில் ஒலிப் பெருக்கிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று இந்துத்துவா மதவெறி அமைப் புகள் தற்போது சர்ச்சையை ஆரம்பித் துள்ளனர்.

“மசூதிகளில், அதிகமான சப்தத்துடன் ஒலிப் பெருக்கிகள்  பயன்படுத்தப்படுவதை மகாராட்டிர அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இல்லா விட்டால் மசூதி களுக்கு வெளியே ஒலிப்  பெருக்கி வைக் கப்பட்டு அனுமன் பாடல்கள் அதிக ஒலியில் ஒலிக்கப்படும்” என்று அண் மையில், மகாராஷ்டிர நவ நிர்மான் கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே கூறி னார். அதன்படியே மும்பை காட் கோபரில் அனுமன் பாடல்களை அதிக ஒலியுடன் அவருடைய கட்சியினர் ஒலி பரப்பினர். தற்போது, கருநாடக மாநில இந்துத்துவா அமைப்புகளும், மசூதியில் ஒலிபெருக்கிகளுக்கு எதிரான தங்களின் கலவரத்தை கூர் தீட்டி வருகின்றன.  மசூதிகளுக்கு போட்டியாக “ஓம் நமச்சிவாயா, ஜெய் சிறீராம்’ மந்திரங்கள், அனுமன் பாடல்களை ஒலிக்க செய்வது” என்றும், முதற்கட்டமாக பெங்களூரு ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து துவங் கும், இந்த கலவரத் திட்டம், பின்னர் மாநிலம் முழுவதும் விரிவுப்படுத்தப்படும் என்றும் பஜ்ரங்தள் அமைப்பின் பரத்செட்டி என்பவர் அறிவித்துள்ளார். பிரமோத் முத்தாலிக் தலைமையிலான சிறீராமசேனா அமைப்பினர், பெலகாவி மாவட்டத்தில் வட்டாட்சியர் உள் ளிட்ட அதிகாரிகளிடம் இதுதொடர் பாக மனு அளித்துள்ளனராம். 

பாஜக தலைமையின்கீழ் அமைந் துள்ள ஒன்றிய, கருநாடக மாநில அர சுகள் மதசார்பின்மையைக் கடைப்பிடிக் காமல், ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவாக் கோட்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளித்து, மதச்சார்பின்மையை சீரழிப் பவையாக உள்ள இந்துத்துவாக் கலவரக் கும்பல்களை, அவர்களின் வகுப்புவாதக் கலவரங்களை ஊக்குவிப்பவையாக இருக்கின்றன. மதச்சிறுபான்மை மக்க ளின் நல்வாழ்வு, அமைதிக்கு கேடு ஏற்படுத்துபவையாக உள்ளன என்று மதசார்பின்மையில் அக்கறையுடன் உள்ளவர்களை வேதனைக்குள்ளாகி வருகின்றன. 


No comments:

Post a Comment