ஒப்புதல் வாக்குமூலம்
* இராமாயணம் கட்டுக்கதை - நானும் திராவிடன்தான்.
- எச்.ராஜா, 'இந்துத் தமிழ்த் திசை', 18.4.2022
>> அப்பாடி...! இராமாயணம் கட்டுக்கதை என்பதைக் காலங்கடந்தாவது ஒப்புக்கொண்டுவிட்டனர். கட்டுக்கதை ராமனுக்கு அயோத்தியில் கோவில் ஏன்?
ஆரியராவது - திராவிடராவது - வெள்ளைக்காரன் கட்டுக்கதை என்று சொன்னர்கள், இப்பொழுது எங்கே வந்து நிற்கிறார்கள் பார்த்தீர்களா?
ஜோடனை ஒரு நாள் அம்பலமாகும்!
* அண்மையில் நடைபெற்ற சட்டசபை, மக்களவை இடைத்தேர்தல்களில் பா.ஜ.க. தோல்வி அடைந்து காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளதே?
>> மக்கள் விழித்துக் கொண்டு வருகிறார்கள்.
ஆன்மிகப் பூமி
* கேள்வி: 2021 ஆம் ஆண்டில் மட்டும் தமிழகத்தில் 3090 போக்சோ வழக்குகள் பதியப்பட்டிருப்பது - எதைக்காட்டுகிறது?
* பதில்: பகுத்தறிவு சமத்துவம், சமூகநீதி அடிப்படையில் அமைந்த பெரியார் மண், தமிழகம் என்று காட்டுகிறதோ?
'துக்ளக்', 2.2.2022, பக்கம் 23
>> இல்லை, இல்லை. இது ஆழ்வார்களும், சங்கராச்சாரியார்களும் வாழ்ந்த மண் - ஆன்மிகம் தழைக்கும் மண் என்பதற்கு அடையாளமோ! மடத்துக்கு வந்த பெண்மணியையே கையைப் பிடித்து இழுத்தவர்தானே இங்கு லோகக் குரு - மகான்!
No comments:
Post a Comment