பிஎஸ்என்எல் 16 ரூபாய்க்கு வழங்கும் ரீசார்ஜ் திட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 6, 2022

பிஎஸ்என்எல் 16 ரூபாய்க்கு வழங்கும் ரீசார்ஜ் திட்டம்

புதுடில்லி, ஏப். 6- பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.16க்கு 30 நாட்கள் வேலிடிட்டி உள்ள ரீசார்ஜ் திட்டத்தை வழங்குகிறது. 

இந்த திட்டத்தில் நிமிடத்திற்கு 20 பைசா என ஆன் நெட் கால்களும், நிமிடத்திற்கு 20 பைசா என ஆஃப் நெட் கால்களும் வழங்கப்படும். எஸ்.எம்.எஸ், டேடா பலன்கள் இந்த திட்டத்தில் கிடையாது.  பிஎஸ்என்எல் சிம்மை பயன்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்த திட்டம் பலன் தரும்.

பிஎஸ்என்எல் ரூ.147க்கு மற்றொரு ரீசார்ஜ் திட்டத்தையும் வழங்குகிறது. இந்த திட்டத்தில் ரூ.147க்கு ரீசார்ஜ் செய்தால் அன்லிமிட்டெட் அழைப்புகள், 10 ஜிபி டேட்டா ஆகியவை 30 நாட்களுக்கு வழங்கப்படும்.

தற்போது ஏர்டெல், ஜியோ, வோடஃபோன் ஆகியவை 30 நாட்கள் வேலிட்டி ரீசார்ஜ்ஜை வழங்கி வரும் நிலையில், பிஎஸ்என்எல் ஏற்கனவே 30 நாட்கள் திட்டத்தை வைத்துள்ளது குறிப்பிடத் தக்கது.

No comments:

Post a Comment