மதுராவில் பசு மாட்டிறைச்சி கடத்தல் வதந்தி! மதவெறிக்கும்பல் கொலைவெறித் தாக்குதல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 25, 2022

மதுராவில் பசு மாட்டிறைச்சி கடத்தல் வதந்தி! மதவெறிக்கும்பல் கொலைவெறித் தாக்குதல்

 மதுரா, மார்ச் 25 - உத்தரப்பிரதேசம் மதுராவில் இஸ்லாமிய ஓட்டுநர் ஒருவர் ஓட்டிச் சென்ற வாகனத்தில் மாட்டிறைச்சி ஏற்றிச் சென்றதாக குற்றம்சாட்டி வலதுசாரி கும்பல் கொடூரமாக தாக்கும் காணொலி சமூக வலைதளங்களில் பரவி வரு

கிறது.

மாட்டிறைச்சி கடத்திய வதந்தி தொடர்பாக பரவும் காணொலியில், சட்டை கிழிக்கப்பட்ட நிலையில் தாக்கப் படும் நபர் தன்னைத் தாக்கும் நபர்களிடம் மன்றாடுகிறார்.

 ஆனால் அதைக் கண்டு கொள்ளாமல் கம்பு மற்றும் 'பெல்ட்'டால் தாக்குகி றார்கள். அதில் ஒரு நபர் தலையிட்டு தடுக்க முயற்சித்தாலும், அவரை ஒதுக்கி விட்டு தாக்குகிறார்கள்.

மார்ச் 20-ஆம் தேதி உத்தரப்பிரதேசத்தின் மதுராவில் உள்ள கிராமத்தில் இறந்த விலங்குகளின் உடல்களை ஏற்றிச் சென்ற வாகனத்தை நிறுத்திய கிராம மக்கள், வாகனத்தில் விலங்குகளின் எலும்புகள் மற்றும் உடல்களைக் கண்ட தால் மாட்டிறைச்சி மற்றும் மாடுகளை கடத்தியதாக சந்தேகத்தின் பெயரில் இஸ்லாமிய ஓட்டுநரை சிறைப்பிடித்து தாக்கி உள்ளனர்.

இதுகுறித்து மதுரா காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில், ”அந்த வாகனம் ஒரு கிராமத்தின் தூய்மை இயக்கத்தின் சார்பாக இறந்த விலங்கு களின் உடல்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. தாக்குதலுக்கு உள்ளான அந்த நபர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு உள்ளார்.

மதுராவில் உள்ள கோவர்தன் பகுதியைச் சேர்ந்த ராமேஷ்வர் வால்மீகி என்பவர், விலங்குகளின் உடல்களை அப்புறப்படுத்த மாவட்ட பஞ்சாயத்தில் உரிமம் பெற்றுள்ளார். 

மதுராவில் இருந்து அருகில் உள்ள மாவட்டத்திற்கு வாகனத்தை அனுப்பி உள்ளார். எங்கள் முதற்கட்ட விசாரணையில் வாகனத்தில் மாடுகளோ, மாட்டி றைச்சியோ ஏதும் கிடைக்கவில்லை. பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் அடிப்டையில் குற்றவழக்கு பதிவு செய்துள்ளோம்" என மதுரா காவல் கண்காணிப்பாளர் தெரிவித்து இருக்கிறார்.

பசு, மாட்டிறைச்சி கடத்தல் வதந்தியால் இஸ்லாமிய ஓட்டுநரைத் தாக்கியதாக வலதுசாரி குழுக்களின் சில உறுப்பினர்கள் உள்பட 16 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  

ஆனால் இதுதொடர்பாக யாருமே கைது செய்யப்படவில்லை.


No comments:

Post a Comment