தாலியா - கல்வியா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 23, 2022

தாலியா - கல்வியா?

மூதாட்டி மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் பெயரில் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம் மாற்றப்பட்டுவிட்டது - இது அநியாயம் என்ற ஒரு குரல் கிளம்பியிருக்கிறது.

இது குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் சர்ச்சை கிளப்பப்பட்டது.

சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே..பாண்டியன் (.தி.மு..), தாலிக்குத்தங்கம் திட்டம் நிறுத்தப்பட்டுவிட்டது என்று பேசினார்.

அதற்கு நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அளித்த விளக்கம் வருமாறு:

திருமண உதவித் திட்டம் 1968ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 5வகையானதிருமண உதவித் திட்டங்கள் செயல் படுத்தப் பட்டு வருகின்றன. ரூ.5 ஆயிரம் என தொடங்கிய உதவித் தொகை படிப்படியாக உயர்த் தப்பட்டு வந்தது. மூவலூர் இராமாமிர்தம் திட்டத்தில் முதலில் 4 கிராம் தங்கம் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த திட்டத்தில் பின்னர் அது 8 கிராம் தங்கமாக உயர்த்தப் பட்ட து. இந்த திட்ட பயனாளிகளைக்கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்த திட்டத்தை மறு ஆய்வு செய்ய அரசு முடிவு செய்தது. அதன்படி, அதில் ஆண்டுதோறும் ஒருலட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் அளிக்கப்படுகின்றன. நிலுவையில் உள்ள மனுக்கள் அடுத்த ஆண்டிற்கு தள்ளி வைக்கப்படுகின்றன; 2016-2017ஆம் ஆண்டில் 1.41 லட்சம் மனுக்கள் பாக்கி; 2017-2018ஆம் ஆண்டில் 1.78 லட்சம் மனுக்கள் பாக்கி; 2018-2019ஆம் ஆண்டில் 2,58 ஆயி ரம் மனுக்கள் பாக்கி; 2019-2020ஆம் ஆண்டில் 2.50 லட்சம் பாக்கி; 2020-2021ஆம் ஆண்டில் 2.87 லட்சம் பாக்கி, இந்த ஆண்டு 3 லட்சத்து 34 ஆயிரத்து 913 விண்ணப்பங்கள் பாக்கி என்று கண்டறியப்பட்டுள்ளது.

பல பிழைகள் அதாவது 2018ஆம் ஆண்டில் இருந்து 4 ஆண்டுகளாக இந்த மனுக்கள் நிலுவையில் உள்ளன. இவற்றுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்றால் ஒரே ஆண்டுக்கு ரூ.3 ஆயிரம் கோடி நிதி தேவை. யார் யார் ரூ.25 ஆயிரம் பெறத் தகுதி பெற்றவர்? யார் யார் ரூ.50 ஆயிரம் பெற தகுதி பெற்றவர்? என்பதைக் கண்டறிவதில் பல பிழைகள் தெரியவந் தன, அதிகம் படித்தவருக்கு அதிக தொகை வழங்கப்பட வேண்டும் என்பது திட்டத்தின் மூல நோக்கம்.

இந்தத்திட்டத்தின் பயனாளிகளைக் கண்டறிவதற்காக ஒருதரவை உருவாக்கினோம். அதன்படி கணக்கிட்டால், நிலுவையில் உள்ள விண்ணப் பங்களில் 24.5 சதவீதம் மனுக்கள் மட்டுமே தகுதியுள்ள வைகளாக தெரியவந்தது. அதாவது, விண்ணப்பதாரர்களில் நான்கில் ஒருவர் தான் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவராக இருக்கிறார். இது ஒரு பிரச்சினை.

இந்தத் திட்டத்தில் மத்திய தணிக்கைத் துறை கண்டுபி டித்த தவறுகள் பல உள்ளன. உரிய காலத்தில் திட்டப் பயனை வழங்கவில்லை ; வரு மான சான்றிதழ் வைக்கப்ப டாத மனுக்களுக்கு பயன் வழங்கப் பட்டுள்ளது. உரிய அலுவலரிடம் வருமான சான்று வாங்கப்படவில்லை, குடும்ப ஆண்டு வருமானம் ரூ.22 ஆயிரம் என்ற வரைய றையை தாண்டி கூடுதல் வரு மானம் உள்ளவர்களுக்கு பயன் வழங்கப் பட்டுள்ளது என்று பல பிழைகள் நடந்துள்ளன.

எந்த இலக்கை வைத்து இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது என்றால், கல்விக்கு ஊக்கம் அளிக்க வேண்டும்; திருமணத்திற்கு உதவி செய்ய வேண்டும் என்பதுதான். திருமணத்தின்போது தாலிக்கு தங்கம் கொடுக்கவில்லை . திருமணமாகி 4 ஆண்டுகள் கழித்தும் பயனை அளிக்கவில்லை என்றால் எப்படி திருமணத்தை நடத்தியிருப்பார்கள்? காலதாமதம் ஆகிவிட்டதால்தான் (கடந்த அதிமுக ஆட்சியில்) இந்தத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதில் பெரிய பிரச்சினை ஏற்பட்டுவிட்டது.

சீரமைப்பு எனவேதான் கல்வி உதவித் தொகையாக மாதாமாதம் கொடுத்தால் இன்னும் சிறப்பாக பயன் கிடைக்கும் என்று முடிவெடுக் கப்பட்டது. முன்பு ஒரு காலத்தில் திருமணம்தான் பெண்களின் முக்கிய நோக்கமாக இருந்திருக்கலாம், பெண்களுக்கு சம உரிமை என்ற திராவிட இயக்கக் கொள்கையின்படி, சுய வேலை வாய்ப்பு. தொழில் தொடங்கும் தன்மையையும் ஊக்குவிப்பதுதான் எங்கள் கடமை .

எனவேதான் 4 ஆண்டுகள் பின் தங்கி இருந்த இந்தத்திட் டத்தை , 24.6சதவீத பயனாளிகளை மட்டுமே கொண்டிருந்த, 10-க்கும் மேற்பட்ட பிழைகள் கண்டறியப்பட்ட இந்தத்திட்டத்தை சீரமைத்து புதுத் திட்டத்தை கொண்டு வந்திருக்கிறோம்.”

இவ்வாறு அவர் பேசினார்.

சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினரின் குற்றச்சாட்டுக்கு தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு பழனிவேல் தியாகராசன் சட்டப்பேரவையில் அளித்த பதில் அறிவுப்பூர்வமானது - நியாயமானதும்கூட.

பெண்களுக்குத் தேவை தாலியல்ல; கல்விதான். அதுவும் அறிஞர் அண்ணா முதல் அமைச்சராக இருந்தபோது, சுயமரியாதைத் திருமணத்திற்கு சட்டப்பூர்வமான அங்கீகாரத்தை அளித்தார்.

அந்தச் சட்டத்தில் தாலி அல்லது மலர் மாலை என்றுதான் இருக்கிறது; தாலி ஒன்றும் கட்டாயம் இல்லை. தாலிக்குத் தங்கம் என்று வருகிறபோது, தாலி மறுப்புக் கொள்கை உடையவர்களுக்கு அதன் பயன் போய்ச் சேருவதற்கு வாய்ப்பே இல்லை.

மேலும் தாலி வழங்கும் திட்டத்தில் ஏற்பட்டுள்ள ஏகப்பட்ட குளறுபடிகளையும் நீண்ட பட்டியலாக வெளியிட்டார். கடந்த ...தி.மு.. ஆட்சியில் ஏற்பட்ட குளறுபடிகள் அவை.

இவ்வளவையும் செய்து விட்டு, அந்த .தி.மு..வைச் சேர்ந்த சட்டப் பேரவை உறுப்பினரே தி.மு.. ஆட்சியின் மீது குற்றப் பத்திரிகை படிப்பது தான் வேடிக்கை.

எந்த இலக்கை வைத்துத் திட்டம் தொடங்கப்பட்டது என்றால், கல்விக்கு ஊக்கம் அளிக்க வேண்டும், திருமணத்திற்கு உதவி செய்ய வேண்டும் என்பதுதான். திருமணத்தின்போது தாலிக்குத் தங்கம் கொடுக்கவில்லை. திருமணமாகி நான்கு ஆண்டுகள் கழித்தும் பயனை அளிக்கவில்லையென்றால் எப்படி திருமணத்தை நடத்தி இருப்பார்கள்? காலதாமதம் ஆகிவிட்டதால்தான் இந்தத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதில் பெரிய பிரச்சினை ஏற்பட்டுவிட்டது.

எனவேதான் கல்வி உதவித் தொகையாக மாதா மாதம் கொடுத்தால் இன்னும் சிறப்பான பயன் கிடைக்கும். திராவிட இயக்கத்தின் கொள்கை யின்படி சுயவேலை வாய்ப்பு தொழில் தொடங்கும் தன்மையையும் ஊக்குவிப்பதுதான் எங்கள் கடமைஎன்று அமைச்சர் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

கல்வியில்லாப் பெண்கள் களர் நிலம்என்றார் புரட்சிக் கவிஞர். “ஒரு வீட்டில் நான்கு குழந்தைகள் இருந்தால் முதலில் பெண் குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டும்என்பார் தந்தை பெரியார்.

அதுவும் தாலி என்பது பெண்களின் அடிமைச் சின்னம் என்பது தந்தை பெரியார் அவர்களின் அழுத்தமான கருத்தாகும்.

ஒரு பெண் திருமணம் ஆனவள் என்பதற்கு அடையாளம் தாலி என்று சமாதானம் சொல்லப்படுமேயானால், ஓர் ஆண் திருமணம் ஆனவர் என்பதற்கு என்ன அடையாளம்?” என்ற அறிவுப்பூர்வமான வினாவை எழுப்பினார் தந்தை பெரியார்.

அந்தக் கேள்விக்கு இதுவரை பதில் சொன்னது யார்? அண்ணா பெயரையும், திராவிடப் பெயரையும் கட்சியில் வைத்துக் கொண்டுள்ள அண்ணா தி.மு..வினர் தாலிக்காக வக்காலத்து வாங்குவது பரிதாப மானது.

No comments:

Post a Comment