புதுடில்லி,மார்ச்23- சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ஒன் றிய பாஜக அரசுக்குக் கண்டனம் தெரிவித்து நாடாளுமன்றத்திலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
பெட்ரோல், டீசல் லிட்டருக்கு தலா 80 காசுகள் உயர்த் தப்பட்டது. வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை ஒன்றின் விலையில் ரூ.50 அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலை யில், இந்த விலை உயர்வைக் கண்டித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பின.
மக்களவையில் எதிர்ப்பு
மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, திமுக எம்.பி. டி.ஆர்.பாலு ஆகியோர் விலை உயர்வை கண் டித்து முழக்கம் எழுப்பியதோடு, விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என முழக்கமிட்டனர். காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசுகையில், ’5 மாநிலத் தேர்தல் முடிந்தவுடன் பெட்ரோல், டீசல், சமையல் உருளை விலை உயரும் என்றே எதிர்பார்த்தோம். அது நடந்துவிட்டது’ என்றார். தொடர்ந்து அவையிலிருந்து காங்கிரஸ், திமுக, திரிணமூல், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
மாநிலங்களவையில் எதிர்ப்பு
மாநிலங்களவையிலும் அவை தொடங்கியவுடன் விதி எண் 267இன் கீழ் விவாதிக்க அனுமதி கோரி எதிர்க்கட்சிகள் தாக்கீது அளித்தன. ஆனால், அவைத் தலைவர் அனுமதி தராத காரணத்தால், அவையில் தொடர்ந்து கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனையடுத்து, மாநிலங்களவை பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இன்றும் (23.3.2022) நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்களால் இப்பிரச்சினை எழுப்பப்பட்டது. மக்களவை, மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒன்றிய பாஜக அரசின் விலை உயர்வுக்கு எதிராக கடுங்கண்டனம் தெரிவித்தனர். இரு அவைகளிலும் நடவடிக்கைகள் முடங்கின. பகல் 12 மணி வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
No comments:
Post a Comment